ரேஷன் கார்டில் பெயர்-முகவரி மாற்றம் செய்ய வேண்டுமா? சென்னையில், இன்று 16 இடங்களில் சிறப்பு முகாம்


சென்னை,

ரேஷன் கார்டில் பெயர்-முகவரி மாற்றம் செய்வது தொடர்பாக சென்னையில், இன்று(சனிக்கிழமை) 16 இடங்களில் சிறப்பு முகாம் நடக்கிறது.

தமிழக அரசு அறிவிப்பு

இதுகுறித்து தமிழக அரசு சார்பில் நேற்று வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

ரேஷன் கார்டில் (குடும்ப அட்டை) மாற்றங்கள் செய்தல் மற்றும் பொதுவினியோக திட்டத்தில் காணப்படும் குறைபாடுகள் குறித்து தமிழகம் முழுவதும் வட்டங்கள் தோறும் மக்கள் குறைதீர் கூட்ட முகாம் ஒவ்வொரு மாதமும் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, உணவுபொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை, சென்னையில் 16 மண்டல பகுதிகளில் மக்களின் குறைகளை கேட்டு தீர்வு காணும் வகையில் இந்த மாதத்திற்கான பொது வினியோகத்திட்ட குறைதீர் கூட்ட முகாம் இன்று(சனிக்கிழமை) காலை 10.00 மணிக்கு நடைபெற உள்ளது.

புகார் தெரிவிக்கலாம்

இதில் பொது வினியோக திட்டத்தைச் செயல்படுத்தும் உணவுபொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை, கூட்டுறவுத்துறை மற்றும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தைச் சார்ந்த அலுவலர்கள் கலந்துகொள்ள இருக்கின்றனர். அப்பகுதியை சுற்றி உள்ள குடும்ப அட்டைதாரர்கள் குடும்ப அட்டைகளில் பெயர், முகவரி மாற்றம், திருத்தம் மற்றும் பொது வினியோக திட்ட கடைகளின் செயல்பாடுகள் குறித்தும் பொது வினியோக திட்ட பொருள்கள் கிடைப்பது குறித்தும் தனியார் துறையில் சந்தையில் விற்கப்படும் பொருட்கள் அல்லது சேவைகள் வாங்கும் நுகர்வோர்கள் ஏமாற்றப்படுவது அல்லது குறைகள் இருப்பது குறித்தும் தங்களுக்கு குறைகள் ஏதேனும் இருப்பின் அவற்றை இக்கூட்டத்தில் தெரிவித்தால் குறைகளை விரைந்து தீர்வு செய்ய உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

சென்னையில் உள்ள 16 மண்டல பகுதிகளில் உள்ள குடும்ப அட்டைதாரர்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்திகொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

முகாம் நடைபெறும் இடங்கள்

* சென்னை தொடக்கப்பள்ளி, அம்மையம்மாள் தெரு, புளியந்தோப்பு.

* ராயபுரம்- சென்னை உருது மகளிர் தொடக்கப்பள்ளி, அர்த்தூன் சாலை, ராயபுரம்.

* பெரம்பூர்- சென்னை நடுநிலைப்பள்ளி, செய்யூர் பார்த்தசாரதி தெரு,(பெரம்பூர் பஸ் நிலையம் அருகில்)

* அண்ணாநகர்- சென்னை மாநகராட்சி விளையாட்டு திடல், சதாசிவமேத்தாநகர், அமைந்தகரை,

* அம்பத்தூர்- அரசினர் மேல்நிலைப்பள்ளி, தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம், அயப்பாக்கம்.

* வில்லிவாக்கம்- சென்னை தொடக்கப்பள்ளி, சீனிவாசாநகர் 3-வது மெயின்ரோடு, கொளத்தூர். (ராஜமங்கலம் போலீஸ் நிலையம் அருகில்)

* திருவொற்றியூர்- சென்னை மாநகராட்சி தொடக்கப்பள்ளி, 2-வது மெயின்ரோடு, எம்.எம்.டி.ஏ. மாத்தூர்.

* ஆவடி - ஆவடி நகராட்சி நடுநிலைப்பள்ளி, சோழம்பேடு, திருமுல்லைவாயல்,

* தியாகராயநகர் - சென்னை நடுநிலைப்பள்ளி, 2-வது மெயின் ரோடு, டிரஸ்ட்புரம், கோடம்பாக்கம்.

* மயிலாப்பூர்- சென்னை மாநகராட்சி அலுவலகம், சாஸ்திரிநகர், 8-வது குறுக்கு தெரு, அடையார்.

* பரங்கிமலை- சந்திரசேகரா திருமண மண்டபம், பாலகிருஷ்ணாபுரம் பிரதானசாலை, ஆதம்பாக்கம்.

* தாம்பரம்- ஜெய்கோபால் கரோடியா நேஷனல் மேல்நிலைப்பள்ளி, பாரத மாதா தெரு, கிழக்கு தாம்பரம். (சானடோரியம் ரெயில்நிலையம் அருகில்)

* சைதாப்பேட்டை- அரசினர் மேல்நிலைப்பள்ளி, திரவுபதி அம்மன் கோவில் தெரு, வேளச்சேரி. (காந்தி சாலை அம்மா உணவகம் அருகில்)

* ஆயிரம் விளக்கு- சென்னை மாநகராட்சி சமுதாய கூடம், சத்தியமூர்த்தி சாலை, சேத்துப்பட்டு (சேத்துப்பட்டு அம்பேத்கர் திடல் அருகில்)

* சேப்பாக்கம்- சென்னை மாநகராட்சி சமுதாய கல்லூரி வளாகம், அருணாச்சலம் தெரு, (சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானம் அருகில்)

* சோழிங்கநல்லூர்- சென்னை மாநகராட்சி அலுவலகம், கிழக்கு கடற்கரைசாலை,

கொட்டிவாக்கம். (அனையாத்தம்மன் கோவில் அருகில்)

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.