சட்டசபை மீண்டும் 14ல் கூடும்

சென்னை:'சட்டசபை மீண்டும், 14ம் தேதி கூடும்' என, த 24ம் தேதி துவங்கியது. நேற்று, தொழில் துறை மற்றும் போக்குவரத்து துறை, மானியக் கோரிக்கை மீது விவாதம் நடந்தது.

கூட்டத்தின் முடிவில், சபை முன்னவர் பன்னீர்செல்வம், அலுவல் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி, சட்டசபையின் அடுத்த கூட்டத்தை, 14ம் தேதி கூட்ட, தீர்மானம் கொண்டு வந்தார்.
இந்த தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. அதைத் தொடர்ந்து, 'அடுத்த கூட்டம், 14ம் தேதி நடைபெறும்' என, சபாநாயகர் தனபால் அறிவித்தார்