TNPSC குரூப் 2 தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான கலந்தாய்வு வரும் 24.08.2015 முதல் 01.09.2015 வரை நடைபெறவுள்ளதாக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) அறிவித்துள்ளது.


குரூப் 2 தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான கலந்தாய்வு வரும் 24 -ஆம் தேதி முதல் நடைபெறவுள்ளதாக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.,) அறிவித்துள்ளது.இது குறித்து தேர்வாணையத்தின் செயலாளர் விஜயகுமார் திங்கள்கிழமை வெளியிட்ட அறிவிப்பு: ஒருங்கிணைந்த குடிமைப்பணிகளுக்கான தேர்வு- II, 2013-2014-இல்
அடங்கிய நேர்முகத் தேர்வு உள்ள பதவிகளுக்கு நேரடி நியமனம் செய்யும் பொருட்டு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், 05.09.2013-ஆம் நாளிட்ட அறிவிக்கையின் வாயிலாக விண்ணப்பங்களைக் கோரியிருந்தது. இப்பதவிகளுக்கான முதன்மை எழுத்துத் தேர்வு, 08.11.2014 மற்றும் 09.11.2014 ஆகிய நாட்களில் நடைபெற்றது. இப்பதவிகளுக்கான நேர்காணல் 15.07.2015 முதல் 08.08.2015 வரை நடைபெற்றது. எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் தேர்வில், விண்ணப்பதாரர் பெற்ற மதிப்பெண்கள் பட்டியல் 10.08.2015 அன்று தேர்வாணையத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டது. 1136 காலிப்பணியிடங்களை நிரப்பும் பொருட்டு நேர்காணலில் கலந்து கொண்ட அனைத்து 2222 விண்ணப்பதாரர்களும் கலந்தாய்வில் கலந்து கொள்ள தற்காலிகமாக அனுமதிக்கப்பட்டுள்ளார்கள். கலந்தாய்வு 24.08.2015 முதல் 01.09.2015 வரை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய அலுவலகத்தில் நடைபெறவுள்ளது. கலந்தாய்வு நடைபெறும் நாள், நேரம் போன்ற விவரங்கள் முறையே அழைப்புக்கடிதம், குறுஞ்செய்தி மற்றும் மின்னஞ்சல் மூலமாக விண்ணப்பதாரர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. அழைப்புக்கடிதம் வரப்பெறாதவர்கள் அதனை தேர்வாணைய இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். கலந்தாய்விற்கு அழைக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள் அவரவருக்கு ஒதுக்கப்பட்ட தேதியில் தவறாமல் கலந்தாய்வில் பங்கேற்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். அவ்வாறு வருகைதரத் தவறும் பட்சத்தில் விண்ணப்பதாரர்களுக்கு அதன் பின்னர் கலந்தாய்வில் பங்கேற்க வாய்ப்பு அளிக்கப்படமாட்டாது. விண்ணப்பதாரர்கள் தரவரிசை மற்றும் பதவிகளுக்கான கல்வித்தகுதி, காலிப்பணியிடங்களின் அடிப்படையில் கலந்தாய்விற்கு அனுமதிக்கப்படுவர். கலந்தாய்விற்கு அழைக்கப்பட்ட அனைவரும் மேற்படி பணியிடங்களுக்கு தெரிவு பெறுவதற்கான எவ்வித உரிமையையும் கோர இயலாது என அறிவுறுத்தப்படுகிறார்கள். பதவிவாரியாகவும், இனவாரியாகவும் உள்ள காலிப்பணியிட விவரங்கள் தேர்வாணைய இணையதளத்தில் தினமும் கலந்தாய்வு முடிந்தவுடன் வெளியிடப்படும். விண்ணப்பதாரர்கள் காலிப்பணியிட விவரங்களை தெரிந்து கொண்டு கலந்தாய்விற்கு ஒதுக்கப்பட்ட தேதியில் கலந்தாய்வில் கலந்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள் | The Tamil Nadu Public Service Commission vide its Notification dated 05.09.2013 invited applications for selection of candidates for appointment by direct recruitment to the posts included in Combined Civil Services Examination-II (Interview Posts) (Group-II Services) for the year 2013-2014. The Main Written Exam was held on 08.11.2014 and 09.11.2014. The Oral Test was conducted from 15.07.2015 to 08.08.2015 and the marks obtained by the candidates both in the Written Examination and at the Oral Test were hosted at the Commission’s website on 10.08.2015. To fillup 1136 vacancies all the 2222 candidates who had attended the Oral Test are provisionally admitted for counselling. Counselling will be held from 24.08.2015 to 01.09.2015 at the office of Tamil Nadu Public Service Commission. The date and time of counselling has been informed to all the candidates by means of notice of counselling, SMS and E-mail. The candidates who have not received the notice of counselling are requested to download the same from the Commission’s website. If the candidates fail to appear for counselling on the scheduled date, they will not be given any further chance to appear for the same. The candidates will be admitted to counselling only based on their Rank, Educational qualification and Vacancies position. Therefore, it is instructed that the provisional admission of the candidates to the counselling does not confer any right for selection. The updates with regard to the post wise / community wise vacancies are available in the Commission’s website viz www.tnpsc.gov.in After confirming the vacancies candidates are requested to attend counselling on the Communicated date.