ஜூலை மாதம் நடைபெற்ற அகில இந்திய மருத்துவக்கல்வி நுழைவுத்தேர்வு முடிவு வெளியீடு

இந்தியா முழுவதும் உள்ள அரசு மருத்துவக்கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர்வதற்கான அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்கள் 15 சதவீதம் உள்ளன. இந்த இடங்களில் மாணவ–மாணவிகள் சேர்வதற்கான
நுழைவுத்தேர்வு கடந்த மே மாதம் நடைபெற்றது. ஆனால், அந்த தேர்வில் முறைகேடு நடைபெற்றதாக கூறப்பட்டது. இதையொட்டி, மறுதேர்வு நடத்தும்படி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.
அதன்படி, மறுதேர்வு கடந்த ஜூலை மாதம் நடத்தப்பட்டது. இந்திய அளவில் 4 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்களும், தமிழகத்தில் 3 ஆயிரத்து 500 மாணவர்களும் எழுதினார்கள். தமிழ்நாட்டில் சென்னை, மதுரை, கோவை, திருச்சி, நெல்லை உள்ளிட்ட 7 இடங்களில் தேர்வு நடைபெற்றது. தேர்வு முடிவு நேற்று வெளியிடப்பட்டது. இந்த முடிவுகளை சி.பி.எஸ்.இ. இணையதளத்தில் பார்க்கலாம்.