மருத்துவம், பொறியியல் சேர்க்கை; எஸ்.சி., பிரிவினருக்கு கவுன்சிலிங்

மருத்துவம், பொறியியல் படிப்புகளில் சேர, எஸ்.சி., பிரிவினருக்கான சென்டாக்கவுன்சிலிங், இன்று 14ம் தேதி நடக்கிறது. தொழிற்கல்வி சேர்க்கையில் இட ஒதுக்கீடு கேட்டு, குடியேறிய ஆதிதிராவிடர் மாணவர்கள் தாக்கல் செய்த மனுவை, தள்ளுபடி செய்து சென்னை
ஐகோர்ட் உத்தரவிட்டது.
ஐகோர்ட் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்தால், கவுன்சிலிங் நடத்துவதில் மேலும் கால தாமதமாகலாம் என்பதால், சென்டாக் நிர்வாகம் உடனடியாகஆதிதிராவிடர் மாணவர்களுக்கான சென்டாக் கலந்தாய்வு இன்று 14ம் தேதி நடக்கும் என, அறிவித்தது.மருத்துவ கவுன்சிலிங்எம்.பி.பி.எஸ்., பி.எஸ்சி., நர்சிங் உள்ளிட்ட மருத்துவபடிப்புகளுக்கான கவுன்சிலிங் இன்று காலை 9.00 மணிக்கு துவங்குகிறது. தரவரிசை பட்டியலில் ஒன்று முதல் 2000 வரை இடம் பெற்றுள்ள எஸ்.சி., மாணவர்கள் பங்கேற்கலாம்.10.00 மணிக்கு 2001 முதல் 3000 வரை,11.00 மணிக்கு 3001 முதல் 3,500 வரை, நண்பகல் 12.00 மணிக்கு 3,501 முதல் 4000 வரை தரவரிசை பட்டியலில் இடம் பெற்ற ஆதிதிராவிடர் மாணவர்களுக்கு கவுன்சிலிங் நடக்கிறது.
பொறியியல்
பிற்பகல் 2.00 மணிக்கு பி.டெக்., படிப்புகளுக்கான பொறியியல் கவுன்சிலிங் துவங்குகிறது. தரவரிசை பட்டியலில் 1 முதல் 3000 வரை இடம் பெற்றுள்ள எஸ்.சி., மாணவர்கள் பங்கேற்கின்றனர். 3.00 மணிக்கு 3001 முதல் 4000 வரை, 4.00 மணிக்கு 4001 முதல் 5126 வரை தரவரிசை பட்டியலில் உள்ள மாணவர்களுக்கு கவுன்சிலிங் நடக்கிறது.
பி.பார்ம்
மாலை 4:30 மணிக்கு நடக்கும் பி.பார்ம் படிப்புக்கான கவுன்சிலிங்கில் 650 மாணவர்கள் பங்கேற்கின்றனர். கவுன்சிலிங் கட்டணம் கவுன்சிலிங்கிற்குவரும் எஸ்.சி., பிரிவினர், தி கன்வீனர், புதுச்சேரி என்ற பெயரில் புதுச்சேரியில் மாற்றத்தக்க வகையில், 350 ரூபாய்க்கு டி.டி., எடுத்து வர வேண்டும். அனைத்து சான்றிதழ்களை நகல் எடுத்து ஒரு செட் உடன் கொண்டுவர வேண்டும்.கவுன்சிலிங் அழைப்பு கடிதம் கிடைக்கப் பெறாத மாணவர்கள் தரவரிசை பட்டியலில்தங்கள் பெயர் இருப்பின், உரிய நேரத்தில் பங்கேற்கலாம் என, அறிவிக்கப்பட்டுள்ளது.