வரலாற்றில் மிகவும் வெப்பமான மாதம் ஜூலை: அமெரிக்க விஞ்ஞானிகள்

பூமியின் வெப்பநிலையை தொடர்ந்து அதிகரித்து வருவதன் மூலம் ஒரு புதிய மற்றும் சிக்கலான சாதனை ஒன்று செய்யப்பட்டுள்ளது. கடந்த ஜூலை மாதம் தான் வரலாற்றின் மிகவும் வெப்பமான மாதம் என அமெரிக்க விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

           இது பற்றி விஞ்ஞானிகள் கூறும் போது ”கடந்த காலத்த ஒப்பிடும் போது 1880 முதல் 2015 வரையிலான ஆண்டுகளில், கடந்த ஜூலை மாதம் தான் மிக உயர்ந்த வெப்பநிலை உடைய மாதமாக இருந்ததுள்ளது. இது புவியின் வெப்பநிலை தொடர்ந்து அதிகரித்தப்படியே இருப்பதை தான் காட்டுகிறது” என தெரிவித்துள்ளனர்.

மேலும் புதைபடிவ எரிபொருள்களை அதிகமாக எரிபதுதான் இதற்கு முக்கிய காரணம் என நேற்று அமெரிக்காவில், ஆன்லைனில் வெளியான மாதாந்திர உலக காலநிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.