இந்த சட்டமன்ற கூட்டத்தொடரில் ஆசிரியர் நியமனம் குறித்து அறிவிப்பு வெளியாகலாம்!

தமிழக சட்டசபை கூட்டத்தொடர் வரும் 24ம் தேதி கூட உள்ள நிலையில்,கூட்டத்தொடரில் பள்ளிக்கல்வித்துறைக்கு புதிய அறிவிப்புகள் வெளியாகும் என்று தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து துறை அதிகாரி ஒருவர் கூறுகையில்,


இந்த கூட்டத்தெதொடரில் பள்ளிக்கல்வித்துறைக்கு புதிய அறிவிப்புகள் வெளியாகும்.குறிப்பாக பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர்கள் புதிய நியமனம் குறித்த அறிவிப்பு இருக்கும்.எத்தனை பணியிடங்கள் என்பதை இப்போது கூறமுடியாது.

அதே போல் முதுகலை ஆசிரியர் பணியிடங்களுக்கான அறிவிப்பும் இருக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.