புதிய கல்வி கொள்கை: இன்று கருத்து கேட்பு

பள்ளி கல்வியை, தற்காலத்துக்கு ஏற்ப மாற்ற, மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக, புதிய கல்விக் கொள்கை தொடர்பான வரைவு அறிக்கையை, மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் வெளியிட்டு உள்ளது.

அறிக்கை தொடர்பாக, மாநிலங்களில் நேரடியாக, மக்களின் கருத்துக்களைக் கேட்கும் கூட்டங் களையும் நடத்த, மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. அதனால், தமிழகத்தில், மாநிலக் கல்வியியல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் மத்திய அரசின் தேசிய கல்வியியல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின், தென் மண்டல அமைப்புடன் இணைந்து கருத்து கேட்புக் கூட்டங்களை நடத்துகிறது.

கடந்த, 6ம் தேதி மதுரையிலும், 8ம் தேதி கோவையிலும் கருத்து கேட்புக் கூட்டம் நடந்தது. இறுதிக் கட்டமாக, சென்னையில் இன்று கருத்து கேட்பு கூட்டம், தாம்பரம் சார் - பதிவாளர் அலுவலகம் அருகிலுள்ள, கார்லி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடக்கிறது.

பொதுமக்கள் சார்பில், பொது அமைப்புகளின் பிரதிநிதிகள், தன்னார்வத் தொண்டு நிறுவன பிரதிநிதிகள், கல்வியாளர்கள், பெற்றோர் பங்கேற்று கருத்து கூறலாம்.