தேர்ச்சி சதவீதத்தை அதிகரிக்க ஆக.,11 முதல் முதுகலை ஆசிரியர்களுக்கு மூன்று நாட்கள் சிறப்பு பயிற்சி

பிளஸ் 2 மாணவர்களின் தேர்ச்சி சதவீதத்தை அதிகரிக்க பத்து பாடங்களின் ஆசிரியர்களுக்கு ஆக.,11 முதல் மூன்று நாட்கள் சிறப்பு பயிற்சி அளிக்கப்பட உள்ளது.கடந்த கல்வியாண்டில் பிளஸ் 2 தேர்ச்சி சதவீதம் குறைந்தது குறித்து பள்ளிக்கல்வித்துறை மாவட்டவாரியாக ஆய்வு மேற்கொண்டது.
குறிப்பிட்ட பத்து பாடங்களில் மாணவர்கள் தேர்ச்சி குறைந்ததுதான் அதற்கு காரணம் என கண்டறியப்பட்டது. அப்பாடங்களின் ஆசிரியர்களுக்கு பயிற்சியளித்து இந்தாண்டு தேர்ச்சி சதவீதத்தை அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.