ஆசிரியப் பயிற்றுனர்களை -பட்டதாரி ஆசிரியராக பணிமாற்றம் செய்யக் கோரிய வழக்கு - BRTE ' s CONVERSION AS B.T CASE

ஆசிரியப் பயிற்றுனர்களை -பட்டதாரி ஆசிரியராக பணிமாற்றம் செய்யக் கோரிய வழக்கில் மாநில திட்ட அலுவலகம் (STATE PROJECT DIRECTOR)சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் (MADURAI BENCH OF CHENNAI HIGH COURT) மேல்முறையீடு  இந்த மேல் முறையீட்டு மனுவில் என்ன சொல்லியிருக்கிறார்கள் (SPD).....


1. பள்ளிக்கல்வி துறையில் போதுமான காலி பணியிடங்கள் இல்லை
2. தற்போதுள்ள ஆசிரியப் பயிற்றுநர்கள் 3/4 தான் இருக்கிறார்கள், மீதமுள்ள 1/4 தேவைபடுகின்றார்கள்


3. கல்வித்தரம் தற்போது தான் 19% லிருந்து 58% _ 68% உயர்ந்துள்ளது. இதற்கு காரணம் ஆசிரியப் பயிற்றுநர்களே
4. SSA மற்றும் RTE யின் முக்கிய அம்சமே., கட்டாய கல்வி, மாணவர்களின் கற்றல் கற்பித்தலை மானிட்டர் செய்தல், மாணவர்கள் சேர்க்கை, தக்கவைத்தல், இடைநிற்றல் ஆகியவற்றை கண்காணிப்பதே.
5. மேற்கூறிய அணைத்துமே ஆசிரியப்பயிற்றுநர்களால் தான் இயங்குகிறது, ஆகவே இவர்களை பள்ளிகளுக்கு பட்டதாரி ஆசிரியர்களாக மாற்ற முடியாது என திட்டவட்டமாக கூறியுள்ளார் நமது மாநில திட்ட இயக்குநர் அவர்கள்.
6. அதுமட்டுமின்றி, தற்போது பள்ளிகளுக்கு ஆசிரியர்களை தகுதித் தேர்வு மூலம் பணியமர்த்தப்படும் வேலையில், எப்படி இவர்களை மட்டும் எப்படி தகுதி தேர்வின்றி பணியில் அமர்த்தப்பட முடியும் என திட்டவட்டமாக கூறியுள்ளது மாநில திட்ட இயக்ககம்.
7. மேலும், ஆசிரியர்களுக்காகவும், ஆசிரியப்பயிற்றுநர்களுக்காவும், SSA லிருந்து ஆண்டுதோறும் பயிற்சிகளுக்காக மட்டும் பல ஆயிரம் கோடி செலவிடப்படுகிறது என்பதையும் தெளிவாக இங்கே குறிப்பிடப்பட்டுள்ளது....