பள்ளிக்கல்வித்துறை சார்பில், அரசு பள்ளி மாணவர்களுக்கு ஆங்கில உச்சரிப்பை
மேம்படுத்தும் நோக்கில் வினியோகிக்கப்பட்ட பிரத்யேக 'சிடி' கற்பித்தலில்
பயன்படுத்தப்படுகிறதா என்பதை ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய
உத்தரவிடப்பட்டுள்ளது.
அரசு பள்ளி ஆசிரியர்களை கொண்டு ஆங்கில உச்சரிப்பை மேம்படுத்த பிரத்யேக 'சிடி'க்கள் தயாரிக்கப்பட்டன. மொத்தம், 43 வகையா
ன 'சிடி'க்கள் தயாரித்து, தமிழகத்தில் உள்ள அனைத்து
தொடக்கப் பள்ளிகளுக்கும் கடந்த பிப்ரவரி மாதம் அனுப்பப்பட்டது. இந்த,
'சிடி'க்களை எல்.சி.டி., புரஜக்டர் மற்றும் லேப்டாப், கம்ப்யூட்டர்
பயன்படுத்தி ஆங்கில ஆசிரியர்கள் கற்பிக்க அறிவுறுத்தப்பட்டது. இதற்கான,
கையேடுகள் ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டது.
இந்நிலையில், பள்ளிகள் திறந்து ஒரு மாத காலம் முடிவடைந்துள்ள நிலையில்,
மாணவர்களின் உச்சரிப்பில் உள்ள மாற்றம், 'சிடி' முறையாக ஆசிரியர்களால்
பயன்படுத்தபடுகிறதா என்பதை ஆய்வு செய்யவும். அதற்கான, பதிவுகளை
அனுப்பிவைக்கவும் மாவட்ட தொடக்க கல்வி அலுவலர்களுக்கு சுற்றறிக்கை வாயிலாக
தெரிவிக்கப்பட்டது. கோவை மாவட்டத்தில், உதவி தொடக்க கல்வி அலுவலர்கள்,
கூடுதல் உதவி தொடக்க கல்வி அலுவலர்களால் ஆய்வுப் பணிகள் நடந்து வருகின்றன.
இம்முறையை செயல்படுத்தாத பள்ளிகள், ஆசிரியர்கள் மீது துறை ரீதியான
நடவடிக்கை எடுக்கப்படும் என, அதிகாரிகள் தரப்பபில் கூறப்பட்டுள்ளது.