சமச்சீர் கல்வி தரம் தாழ்ந்து விட்டது:தனியார் பள்ளி சங்கத்தினர் புகார்

சென்னை பாரிமுனை, ராஜா அண்ணாமலை மன்றத்தில், தனியார் பள்ளி நிர்வாகிகள் சங்க மாநாடு, நேற்று நடந்தது. இதில், 12 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதுகுறித்து சங்க நிர்வாகிகள் கூறியதாவது:
l சென்னை ஐ.ஐ.டி., நுழைவுத் தேர்வில் பங்கேற்ற தமிழக மாணவர்கள், 2,815 பேரில், 451 பேர் தேர்வு பெற்றனர். இதில், சி.பி.எஸ்.இ., பாடத் திட்டத்தில் பயின்றவர்கள், 418 பேர்; சமச்சீர் கல்வியில் பயின்றவர்கள், 33 பேர். ஆந்திராவில், 3,204 மாணவர்கள் தேர்வு பெற்றுள்ளனர்.
l தமிழகத்தில், சமச்சீர் கல்வி தரம் தாழ்ந்துள்ளதையே இது காட்டு
கிறது. சமச்சீர் கல்வியை, சி.பி.எஸ்.இ.,க்கு இணையாகவோ அல்லது சி.பி.எஸ்.இ., பாடத் திட்டத்தையே, சமச்சீர் கல்வியாகவோ மாற்ற வேண்டும்.
l கடந்த, 11 ஆண்டு
களாக சமச்சீர் கல்வியில், பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 பாடத்திட்டம் மாற்றப்படாமல் உள்ளது. இதனால், தமிழகத்தில், கல்வித் தரம் குறைந்து வருகிறது.
l தனியார் பள்ளிகளுக்கான நில அளவையை குறைக்க வேண்டும்.
l 10 ஆண்டுகள் தொடர் அங்கீகாரம் பெற்ற பள்ளிகளுக்கு, நிரந்தர அங்கீகாரம் வழங்க வேண்டும்.
l பொதுத்தேர்வில், 100 சதவீத தேர்ச்சி பெறும் பள்ளிகளுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்க வேண்டும்.
l பள்ளி வாகனங்களுக்கான போக்குவரத்து விதிகளை தளர்த்த வேண்டும்.
இவ்வாறு, அவர்கள் கூறினர்