ஆசிரியர் பணியிட மாறுதல் கலந்தாய்வு | அரசிடம் அனுமதி பெற்ற பிறகு, விரைவில் அதிகாரப்பூர்வ கலந்தாய்வு அட்டவணை வெளியிடப்படும் என பள்ளிக்கல்வித்துறை தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆசிரியர் பணியிட மாறுதல் கலந்தாய்வு தொடர்பாக விரைவில் அறிவிப்பு வெளியிடப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்களுக்கான பணியிட மாறுதல் கலந்தாய்வுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை பள்ளிக் கல்வித் துறை அண்மையில் வெளியிட்டது. அதில்,
ஒரே பள்ளியில் 3 ஆண்டுகள் பணிபுரிந்தவர்கள் மட்டுமே பணியிட மாறுதலுக்கு விண்ணப்பிக்கலாம் என்பது உள்ளிட்ட புதிய நிபந்தனைகள் விதிக்கப்பட்டிருந்தன. இந்த நிலையில், வருகிற 29-ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 18 வரை பணியிட மாறுதல் கலந்தாய்வு நடத்த உத்தேச அட்டவணை தயாரிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாயின. இதுதொடர்பாக அதிகாரிகள் கூறுகையில், இந்தக் கால அட்டவணை இன்னும் உறுதி செய்யப்படவில்லை. அரசிடம் அனுமதி பெற்ற பிறகு, விரைவில் அதிகாரப்பூர்வ கலந்தாய்வு அட்டவணை வெளியிடப்படும் என்றனர்.