கலாம் படத்துக்கு ஜார்க்கண்ட் பெண் அமைச்சர் நீரா யாதவ் போட்ட மாலை: இன்று உண்மையிலேயே பிரிந்தது கலாம் உயிர்

கடந்த சில தினங்களுக்கு முன்பு கலாமின் புகைப்படத்திற்கு ஜார்க்கண்ட் மாநிலத்தின் கல்வி அமைச்சரான நீரா யாதவ் மாலை அணிவித்து சர்ச்சையில் சிக்கிக் கொண்டார்.

அவர் மாலை போட்ட நேரமோ என்னவோ இன்று உண்மையிலேயே நம்மை விட்டுப் பிரிந்து விட்டு நமது அக்னிச்சிறகு கலாம்.
ஜார்க்கண்ட் மாநிலம் கோதர்மா என்ற இடத்தில் நடந்த நிகழ்ச்சியில்தான் இப்படி நடந்து கொண்டார் அமைச்சர் நீரா யாதவ்.
ஜார்க்கண்ட் மாநிலம் கோதர்மாவில் ஒரு பள்ளிக்கூடத்தில் ஸ்மார்ட் வகுப்புகள் தொடக்க விழாவிற்கு சிறப்பு விருந்தினராக நீரா யாதவ் அழைக்கப்பட்டிருந்தனர். நிகழ்ச்சியின் தொடக்கத்திற்கு முன்பு அவர் கலாம் படத்திற்கு மாலை போட்டு வணங்கினார். அவருடன் பாஜக எம்.எல்.ஏ மனீஷ் ஜெய்ஸ்வால், பள்ளி முதல்வரும் கலாம் படத்தை வணங்கினர்.
இந்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியதைத் தொடர்ந்து நீரா யாதவ், "மக்களால் மதிக்கப்படும் பெரிய மனிதர்களுக்கு இது போல மரியாதை செலுத்தப்படுவது வழக்கம்தான். கலாம் மாபெரும் விஞ்ஞானி. எனவேதான் அவருக்கு மாலை அணிவித்து வணங்கினேன்" என்று விளக்கம் அளித்திருந்தார்.
இந்நிலையில் அச்சம்பவத்தின் சர்ச்சை அடங்குவதற்கு முன்பு, இன்று நிஜமாகவே அவர் நம்மை விட்டு பிரிந்து சென்ற சம்பவம் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.