ஹெல்மெட் : பெண்கள்,பெண் குழந்தைகளுக்கு விலக்கு

சென்னை : தமிழக அரசின் மோட்டார் வாகன சட்டத்தின்படி இருசக்கர வாகனங்களில் பின்னால் அமர்ந்து செல்லும் பெண்களுக்கும், 12 வயதிற்கு உட்பட்ட பெண் குழந்தைகளுக்கு


மட்டும் ஹெல்மெட் அணிவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இருசக்கர வாகனத்தில் செல்லும் அனைவரும் கட்டாயம்ஹெல்மெட் அணிய வேண்டும் என்ற விதிமுறை இன்றுமுதல் அமலுக்கு வந்துள்ளதால், பின்னால் அமர்ந்து செல்பவர்களும் ஹெல்மெட் அணிய வேண்டும் என கூறப்பட்டுள்ளது. இது குறித்து விளக்கம் அளித்துள்ள தமிழக அரசு, பின்னால் அமரும் பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் விலக்கு அளிப்பதாக தெரிவித்துள்ளது.
http://www.dinamalar.com/news_detail.asp?id=1286734