வருங்கால வைப்பு நிதி கணக்குடன் இணைப்பதற்காக, அரசு ஊழியர்கள் ஆதார் எண் சமர்ப்பிக்க வேண்டும்.

வருங்கால வைப்பு நிதி கணக்குடன் இணைப்பதற்காக, அரசு ஊழியர்கள் ஆதார் எண் சமர்ப்பிக்க வேண்டும். இதற்கு இரண்டு மாதம் அவகாசம் எடுத்துக்கொள்ளலாம். வயதானவர்கள், மருத்துவ சிகிச்சை பெறுபவர்கள் மேலும் ஒரு மாத காலம் அவகாசம் எடுத்துக்கொள்ளலாம்' என்று, அந்த சுற்றறிக்கையில், கணக்குத்துறை ஆணையர் தெரிவித்துள்ளார்.


           அரசுப்பணியாளர் சங்க மாநில தலைவர் செல்வராஜ் கூறுகையில், ''தமிழகம் முழுக்க, மூன்று லட்சம் நிரந்தர அரசுப்பணியாளர்களும், மூன்று லட்சம் தொகுப்பூதிய பணியாளர்களும் உள்ளனர். ஆதார் எண் கட்டாயம் என்பதை நாங்கள் புரிந்து கொண்டிருக்கிறோம்.

கால அவகாசம் என்பதையும், சம்பளத்தை நிறுத்துவது என்பதையும் ஏற்றுக்கொள்ள முடியாது. அப்படி செய்தால் நாங்கள் போராட்டத்துக்கு தள்ளப்படுவோம்,'' என்றார்..3

சம்பளத்தில் பி.எப்., தொகை பிடித்தம் செய்யப்படும் தனியார் நிறுவன ஊழியர்களிடமும், ஆதார் எண் சேகரிக்கும் பணியை, வருங்கால வைப்பு நிதி அலுவலகங்கள் முழு வீச்சில் மேற்கொண்டுள்ளன.