அரசு பள்ளிகளில் கட்டாய சிறப்பு வகுப்பு

கல்வியாண்டு துவக்கத்திலேயே, 1௦ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவ, மாணவியருக்கு, அரசு பள்ளிகளில், சிறப்பு வகுப்புகளும், தேர்வுகளும் நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. 6, 7, 8ம் வகுப்பு ஆசிரியர்களை விட, தினமும் மூன்று மணி நேரம் கூடுதலாகவும், சனிக்கிழமை மு
ழுவதும், பள்ளியில் செலவிட வேண்டியுள்ளதால், ஆசிரியர்களிடையே கடும் அதிருப்தி எழுந்துள்ளது.
முழு வேலை நேரம்
தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளாக, பிளஸ் 2 மற்றும், 10ம் வகுப்பு பொதுத்தேர்வில், தேர்ச்சி விகிதம் அதிகரிக்கப்பட வேண்டும் என, பள்ளி நிர்வாகங்களுக்கு அறிவுறுத்தப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு, காலாண்டு தேர்வு முடிந்ததும் துவங்கிய கெடுபிடி, இந்த கல்வியாண்டில், வகுப்பு துவங்கியதிலிருந்தே ஆரம்பித்துவிட்டது.காலை, 8:15 மணியிலிருந்தும், மாலை, 4 மணியிலிருந்தும் இருவேளை சிறப்பு வகுப்புகளும், சனிக்கிழமை முழு வேலை நேரமாக சிறப்பு வகுப்பு நடத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது. 
பிளஸ் 2 மற்றும், ௧௦ம் வகுப்பு ஆசிரியர்கள் மட்டும் இதில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.இந்த ஆசிரியர்கள் காலை, 8:00 மணிக்கு பள்ளிக்கு வந்து, மாலை, 6:00 மணிக்கு பின்பே வீடுதிரும்பும் நிலை உள்ளது. மற்ற வகுப்புகள் நடத்தும் ஆசிரியர்கள், காலை, 9:௦௦ மணிக்கு வந்து, மாலை, 4:௦௦ மணிக்கு வீடு திரும்பும் நிலையில், ஆசிரியர்களிடையே காட்டப்படும் இந்த பாகுபாடு, அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.இதுகுறித்து அரசுப்பள்ளி ஆசிரியர்கள் கூறியதாவது:பொதுவாக, அரசு பள்ளிகளில் அரையாண்டு தேர்வு முடிந்த பின், தேர்ச்சி விகிதம் கூட்டுவதற்காக, ஆசிரியர்களே விரும்பி, சிறப்பு வகுப்புகளை நடத்துவது வழக்கம். ஆனால், தற்போது, கல்வியாண்டின் துவக்கதிலேயே சிறப்பு வகுப்புகளை நடத்த கட்டாயப் படுத்தப்பட்டுள்ளனர்.பொதுவாக, பள்ளியில் சீனியர் ஆசிரியர்களே, 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பாடம் நடத்துவது வழக்கம். அவர்களுக்கு அதிக வேலைநேரம் ஒதுக்கிவிட்டு, மற்ற பாட ஆசிரியர்களுக்கு, குறைந்த நேரம் மற்றும் சனிக்கிழமை விடுமுறை உள்ளிட்டவை யும் கிடைக்கிறது.இதனால், பல ஆசிரியர்கள், ௧௦ம் வகுப்புக்கு பாடம் நடத்துவதை விட்டுவிட்டு, கீழ் வகுப்புகளுக்கு சென்றுவிடலாமா என யோசித்து வருகின்றனர்.பள்ளி வேலை நேரத்தில், நலத்திட்டம் வழங்குதல், புள்ளி விவரம் சேகரித்தல் என, அலுவலக பணிகளை ஆசிரியர்களிடம் ஒப்படைத்துவிட்டு, தினமும் சிறப்பு வகுப்பு கள் என்பதை, பெற்றோரையும், பொதுமக்களையும் ஏமாற்றும் செயலாகவே அமைந்துள்ளது. 
பலன் தரும்
பெரும்பாலான ஆசிரி யர்கள், விருப்பமின்றி கடமைக்கு, நடத்துகின்றனர். இதனால், பெரிய அளவில், எவ்வித பயனும் கிடைக்கப்போவதில்லை. அதிக நேரம் வகுப்புகளால், மாணவ, மாணவியரும் களைத்து போகின்றனர். கட்டாய சிறப்பு வகுப்புகளைவிடவும், பள்ளி வேலைநேரத்தில் முழுமையாக பாடம் நடத்தப்படுகிறதா என்பதை கண்காணிப்பது நல்ல பலனை தரும் என்பதை, கல்வி நிர்வாகம் உணர வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.