ஆசிரியர் பயிற்சி டிப்ளமோஇன்று கவுன்சிலிங் துவக்கம்

ஆசிரியர் பயிற்சி, டிப்ளமோ படிப்புக்கான கவுன்சிலிங், இன்று முதல், 4ம் தேதிவரை நடக்கிறது.தமிழகத்தில், 440 ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில், 15 ஆயிரம் இடங்கள் உள்ளன. இவற்றில், மாணவர்களை சேர்ப்பதற்கான கவுன்சிலிங், இணையதளம் வழியாக, இன்று துவங்கி, 4ம் தேதி முடிகிறது.

         அனைத்து மாவட்டஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன அலுவலகத்தில் இந்த கவுன்சிலிங், காலை 9:00 மணிக்கு துவங்கும். விண்ணப்பதாரர்கள், ஒரு மணி நேரத்துக்கு முன் வந்துவிட வேண்டும் என, ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குனர் ராமேஸ்வர முருகன் அறிவித்துள்ளார்.