டிப்ளமோ நர்சிங் படிப்புக்கு இன்று முதல் விண்ணப்பம்

சென்னை:'டிப்ளமோ நர்சிங்' படிப்புக்கான விண்ணப்ப வினியோகம், இன்று துவங்குகிறது.
தமிழகத்தில், அரசு மருத்துவக் கல்லுாரிகள் மற்றும் மாவட்ட தலைமை மருத்துவ

மனைகள் என, 23 இடங்களில் இரண்டாண்டு, டிப்ளமோ நர்சிங் படிப்புக்கு, 2,000 இடங்களுக்கு மேல் உள்ளன. இந்த இடங்களில், மாணவர் சேர்க்கைக்கு, விண்ணப்ப வினியோகம், இன்று
துவங்குகிறது. 'அரசு மருத்துவக் கல்லுாரிகள் உட்பட, 27 இடங்களில், ஆக., 1ம் தேதி வரை கிடைக்கும். ஆக., 4ம் தேதிக்குள், விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும். மேலும், விவரங்களை, www.tnhealth.org என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்' என, மருத்துவக் கல்வி இயக்ககம் அறிவித்து உள்ளது.