பள்ளிக்குள் தகராறு செய்தஆசிரியர்கள் 'சஸ்பெண்ட்'

திருப்பூர்:முன்விரோதத்தால், பள்ளிக்குள் தகராறு செய்த தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டனர்.திருப்பூர் ஆண்டிபாளையம் மாநகராட்சி நடுநிலைப் பள்ளி உள்ளது. தலைமை ஆசிரியர் சகாயராணியும், பட்டதாரி ஆசிரியர் முதலியப்பனும், கருத்து வேறுபாடு காரணமாக, அடிக்கடி வாக்குவாதம் செய்து வந்துள்ளனர்.

புகாரின் அடிப்படையில், தெற்கு உதவி தொடக்கக் கல்வி அலுவலர்
அழகர்சாமி விசாரணை நடத்தினார்.

அப்போது, சகாயராணி, பள்ளிக்கு வெளியாட்கள் சிலரை அழைத்து வந்தார். போலீசார் வரவழைக்கப்பட்டதால், அந்த நபர்கள் தப்பியோடிவிட்டனர்.இதுபற்றி விசாரணை நடத்திய, முதன்மை கல்வி அலுவலர் முருகன், பள்ளி வளாகத்தில் மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் முன்னிலையில், தகராறில் ஈடுபட்ட சகாயராணி, முதலியப்பன் ஆகிய இருவரையும், 'சஸ்பெண்ட்' செய்து உத்தரவிட்டார். இருவர் மீதும், துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என, கூறப்படுகிறது.