ஆன்ட்ரிக்ஸ் இணையதளம் விஷமிகளால் முடக்கம்

புதுடில்லி: 'இஸ்ரோ' எனப்படும், இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின் வர்த்தக விவகாரங்களுக்கான, விசேஷ இணையதளமான, 'ஆன்ட்ரிக்ஸ்' விஷமிகளால் நேற்று சிறிது நேரம் முடக்கப்பட்டது.


வெற்றிகரமாக...:

மூன்று நாட்களுக்கு முன், ஆந்திராவின் ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து, ஐந்து பிரிட்டன் செயற்கைக் கோள்கள் உட்பட, 10 செயற்கைக்கோள்களை சுமந்து, வெற்றிகரமாக விண்ணுக்குச் சென்ற, பி.எஸ். எல்.வி., ராக்கெட்டின் பெருமையை பொறுத்துக் கொள்ளாத யாரோ, இந்த நாசக்கார வேலையை செய்துள்ளனர். ஆன்ட்ரிக்ஸ் இணைய தளத்தில் இருந்த பக்கங்களுக்குப் பதிலாக, சம்பந்தமே இல்லாத ஆங்கில எழுத்துகள், அதில் இருந்தது.
செயல்பட...:

அதை அறிந்த நம் கம்ப்யூட்டர் வல்லுனர்கள், சிறிது நேரத்தில் கோளாறை சரி செய்து, ஆன்ட்ரிக்ஸ் இணையதளத்தை செயல்பட வைத்தனர். இணையதளத்தை முடக்கியது, சீனாவைச் சேர்ந்தவர்களாக இருக்கலாம் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.