சமையலர், துப்புரவாளர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

நாமக்கல் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கீழ் செயல்படும் மாணவ, மாணவியர் விடுதிகள் மற்றும் பழங்குடியினர் நல உண்டு, உறைவிடப் பள்ளிகளில் காலியாகவுள்ள சமையலர், துப்புரவாளர் காலிப்பணியிடங்களுக்கு விண்ண
ப்பிக்கலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து, நாமக்கல் மாவட்ட ஆட்சியர் வி.தட்சிணாமூர்த்தி வெளியிட்ட செய்தி: 11 சமையலர், 21 துப்புரவாளர் காலிப்பணியிடங்களுக்குத் தகுதியானவர்கள் நியமிக்கப்படவுள்ளனர். 18 வயதுக்கு மேல் 35 வயதுக்குள்பட்ட, தமிழில் எழுதப்படிக்கத் தெரிந்தவர்கள் விண்ணப்பிக்கலாம். சமையலர் பணிக்கு முன் அனுபவம் அவசியம். தகுதியான நபர்கள் வரும் 6-ஆம் தேதிக்குள், மாவட்ட ஆதிதிராவிட மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தில் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும்.