தொகுப்பூதிய காலத்தைக் கணக்கிட்டு ஓய்வூதியம் வழங்க வலியுறுத்தல்

தொகுப்பூதிய காலத்தைக் கணக்கிட்டு ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்ற உயர் நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றுமாறு, தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளி தொழிற்கல்வி ஆசிரியர் கழகம் வலியுறுத்தியது.
பதவி உயர்வு இல்லாமல் தவித்து வரும் தொழிற்கல்வி ஆசி
ரியர்களுக்கு தேர்வுநிலை தர ஊதியமாக ரூ. 5,400 வழங்க வேண்டும். தமிழகத்தில் அனைத்துவகை ஆசிரியர்களுக்கும் உயர் கல்வி பெற்றிருந்தால் ஊக்க ஊதிய உயர்வு வழங்குவது போல, தொழிற்கல்வி ஆசிரியர்களுக்கும் வழங்க வேண்டும்.
தொழிற்கல்விப் பாடத்தை அனைத்து வகை மேல்நிலைப் பள்ளிகளிலும் கட்டாயமாக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை அந்தச் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
பள்ளிக் கல்வித் துறை இணை இயக்குநர் (தொழிற்கல்வி) பாஸ்கர சேதுபதியை நேரில் சந்தித்து சங்க நிர்வாகிகள் த.ராமசந்திரன், செ.நா.ஜனார்த்தனன் உள்ளிட்டோர் இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தினர்.