எக்ஸிம் வங்கி மேலாளர் & அதிகாரி பணி

எக்ஸிம் வங்கியில் நிரப்பப்பட உள்ள 78 மேலாளர் மற்றும் அதிகாரி பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்த காலியிடங்க: 78
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:

1. மேலாளர் (Manager) - 68
தகுதி: எம்பிஏ,சிஏ,சட்டம்,பி.இ, எம்சிஏ,எம்.ஏ(பொருளாதாரம்)போன்ற ஏதாவதொன்றில் பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
சம்பளம்: மாதம் ரூ.19,400 - 28,100
2.நிர்வாக அதிகாரி (Administrative Officer) - 10
தகுதி: ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். மேலும் கணினி குறித்து அறிவு பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.14,500 - 25,700
வயதுவரம்பு: பொதுப்பிரிவினருக்கு 30க்குள்ளும், ஓபிசி பிரிவினருக்கு 33க்குள்ளும், எஸ்சி, எஸ்சி பிரிவினருக்கு 35க்குள்ளும் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 22.07.2015
ஆன்லைன் விண்ணப்ப பிரதி சென்று சேர கடைசி தேதி: 06.08.2015
மேலும் விண்ணப்பிக்கும் முறை,விரிவான தகுதி விவரங்கள், கட்டணம் போன்ற முழுமையான விவரங்கள் அறிய http://www.eximbankindia.in/sites/default/files/advt2015.pdf என்ற இணையதளத்தை பார்க்கவும்.