இணையதளம் முடங்கியது!

பிளஸ் 2, பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவியருக்கு, அசல் மதிப்பெண் சான்றிதழ் வினியோகம் மற்றும் 'ஆன் - லைன்' வழியில், வேலைவாய்ப்பக பதிவு ஆகியவை, மாநிலம் முழுவதும், பள்ளிகளில் நேற்று துவங்கியது.

மாநிலம் முழுவதும், முதல் நாளிலேயே, பல லட்சம் மாணவ, மாணவியர் குவிந்ததால், வேலைவாய்ப்பு பதிவு செய்ய முடியாத அளவிற்கு, வேலைவாய்ப்பு துறை இணையதளம் (tnvelaivaaippu.gov.in) முடங்கியது. இதனால், மாணவ, மாணவியர், நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
கோவையில், நேற்று, பகல், 2:00 மணிக்குப் பிறகும், 'சர்வர்' பிரச்னை தீராததால், தலைமை ஆசிரியர்கள், மாணவர்களை, வேறொரு நாள் வருமாறு, திருப்பி அனுப்பினர்.