'பி.எஸ்.எல்.வி.,கவுன்ட் - டவுன்

சென்னை:'பி.எஸ்.எல்.வி., சி - 28' ராக்கெட், பிரிட்டன் மற்றும் அமெரிக்க செயற்கைக் கோள்களுடன் வரும் 10ம் தேதி இரவு 9:58 மணிக்கு விண்ணில் செலுத்தப்படுகிறது. இதற்கான, 62.5 மணி நேர,' கவுன்ட்- டவுன்' இன்று காலை, 7:30 மணிக்கு துவங்குகிறது.


இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான - இஸ்ரோ, வணிக ரீதியாக செயற்கை கோள்களை விண்ணில் செலுத்த, 'ஆன்டிரிக்ஸ்' நிறுவனத்துடன் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.
இதன்படி, பிரிட்டன் நாட்டின், 'டிராஸ்டர் மேனேஜ்மெண்ட் கன்சல்டேஷன்' என்ற, 1,440 கிலோ எடை கொண்ட, மூன்று செயற்கை கோள்களும், அமெரிக்காவை சேர்ந்த, 'சரே' நிறுவனத்தின், மைக்ரோ மற்றும் நானோ என, இரு செயற்கைகோள்களும், செலுத்தப்பட உள்ளன.