ஆசிரியர்களுக்கு விளையாட்டு பயிற்சி

விருதுநகர்: தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் ஆசிரியர்களுக்கான விளையாட்டு பயிற்சி முகாம் ஆகஸ்டில் நடக்கிறது.

ஆசிரியர்கள், உடற்கல்வி இயக்குனர்களுக்கு நீச்சல், ஸ்குவாஷ், ஜிம்னாஸ்டிக்ஸ், வாள்சண்டை, குத்து சண்டை, டேக்வாண்டோ, சதுரங்கம், சாலை சைக்கிள், கடற்கரை கையுந்து பந்து, கேரம், சிலம்பம், வளைபந்து, ஜூடோ உட்பட மற்ற விளையாட்டுகளில் வந்துள்ள புதிய விதிமுறை மாற்றங்கள் குறித்து மூன்று நாட்கள் இருப்பிட பயிற்சி முகாம் நடக்கிறது. மாவட்டத்திற்கு 50 ஆசிரியர்கள் அனுமதிக்கப்படுவர். இப்பயிற்சி முகாமில் கலந்து கொள்பவர்கள்
40 வயதிற்குட்பட்டவர்களாக இருக்க வேண்டும். பயிற்சி மாவட்ட தலைநகரங்களில்
நடத்தப்பட உள்ளது. பயிற்சியை சம்பந்தப்பட்ட விளையாட்டு கழகங்கள், மண்டல முதுநிலை மேலாளர் ஆலோசனையுடன் நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.