விளையாட்டு பிரிவு மீதி இடம்: 8ம் தேதி இன்ஜி., கவுன்சிலிங்

அண்ணா பல்கலையின் இன்ஜி., கவுன்சிலிங்கில், விளையாட்டுப் பிரிவுக்கு, கடந்த, 28ம் தேதி கவுன்சிலிங் நடந்தது. மொத்த ஒதுக்கீட்டில், 500 இடங்களில், 385 இடங்கள் நிரம்பின. மீதமுள்ள, 115 இடங்கள் காலியாக உள்ளன.
இந்த இடங்களை நிரப்ப, இரண்டாம் கட்ட கவுன்சிலிங், 8ம் தேதி, அண்ணா பல்கலையில் நடக்கிறது.விண்ணப்பித்தோர்
, விண்ணப்ப எண்ணை, அண்ணா பல்கலை இணையதளத்தில் பதிவு செய்து பார்த்தால், தங்கள் சான்றிதழ் மற்றும் தர வரிசை விவரங்கள் தெரியவரும். அழைப்பு வந்திருந்தால், இரண்டாம் கட்ட கவுன்சிலிங்கில் பங்கேற்கலாம்.