பி.இ. துணைக் கலந்தாய்வு: 31 இல் விண்ணப்ப பதிவு

பொறியியல் துணைக் கலந்தாய்வுக்கான அறிவிப்பை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது.
பிளஸ் 2 சிறப்புத் துணைத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்காக ஒவ்வொரு ஆண்டும் இந்தக் கலந்தாய்வு நடத்தப்படுகிறது.

இதில் பங்கேற்று பி.இ. சேர விரும்பும் மாணவர்கள் வருகிற 31 ஆம் தேதி அண்ணா பல்கலைக்கழகத்துக்கு நேரில் வந்து பதிவு செய்து, ஆகஸ்ட் 1 ஆம் தேதி நடைபெறும் கலந்தாய்வில் பங்கேற்று இடங்களைத் தேர்வு செய்யலாம்.
அவ்வாறு பதிவு செய்ய வரும்போது பிளஸ் 2 மதிப்பெண் பட்டியல், பிளஸ் 2 தேர்வு அனுமதி கடிதம், பத்தாம் வகுப்பு மதிப்பெண் பட்டியல், மாற்றுச் சான்றிதழ், நிரந்தர சாதிச் சான்றிதழ், புகைப்படம் ஆகியவற்றை கொண்டுவர வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம் ரூ. 500. எஸ்.சி., எஸ்.சி.ஏ., எஸ்.டி. பிரிவினருக்கான விண்ணப்பக் கட்டணம் ரூ. 250.
எஸ்.சி.ஏ. இடங்களை நிரப்ப...
இதுபோல் பொதுக் கலந்தாய்வில் நிரப்பப்படாத எஸ்.சி.ஏ. இடங்களில் தாழ்தப்பட்ட இன (எஸ்.சி.) மாணவர்களை சேர்ப்பதற்கான கலந்தாய்வு ஆகஸ்ட் 2 ஆம் தேதி நடைபெறும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
விருப்பமுள்ள எஸ்.சி. மாணவர்கள் அன்றையதினம் காலை 9 மணி முதல் 10 மணி வரை வருகையைப் பதிவு செய்து கலந்தாய்வில் பங்கேற்கலாம்.
மேலும் விவரங்களுக்கு  www.annauniv.edu இணையதளத்தைப் பார்த்து தெரிந்துகொள்ளலாம்.