பிளஸ் 2 முடித்தவர்களுக்கு ராணுவத்தில் இலவச பொறியியல் படிப்புடன் நிரந்தர பணி

இந்திய ராணுவத்தில் 10 +2 Technical Entry Scheme திட்டத்தின் 34வது கோர்சில் சேர்ந்து அடிப்படை ராணுவ பயிற்சி மற்றும் இன்ஜினியரிங் பயிற்சி பெற்று பின்னர் பணியில் சேருவதற்கான தேர்வு எழுத தகுதியான திருமணமாகாத ஆண்களிடமிருந்து விண்ணப்பங்கள்
வரவேற்கப் படுகின்றன.
பணி: 10 +2 Technical Entry Scheme Course-34.
காலியிடங்கள்: 90
கல்வித் தகுதி: இயற்பியல், வேதி யியல், கணிதம் ஆகிய பாடப்பிரிவுகளில் 70 சதவீத மதிப்பெண்கள் மற்றும் அதற்கு மேல் மதிப்பெண்கள் பெற்று பிளஸ் 2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டு்ம்.
வயது வரம்பு: 16½ லிருந்து 19½க் குள் இருக்க வேண்டும். அதாவது விண்ணப்ப தாரர்கள் 1.7.1996க்கு முன்பே அல்லது 1.7.1999க்கு பின்பே பிறந்தவர்களாக இருக்கக் கூடாது (இரண்டு தேதிகள் உட்பட).
ஆன்லைன் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்ட பின் தகுதியானவர்கள் தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள்.
தேர்வு நடைபெறும் இடங்கள்: பெங்களூர், போபால், அலகாபாத் ஆகிய இடங்களில் நடைபெறும். மொத்தம் 5 நாட்கள் நடைபெறும். தேர்வு இரண்டு கட்டங்களை கொண்டதாகும். முதற்கட்ட தேர்வில் தேர்ச்சி பெறுபவர்கள் மட்டுமே அடுத்த கட்ட தேர்வுக்கு அனுமதிக்கப்படுவர். இரண்டாம் கட்டத் தேர் வானது குழுவிவாதம், நேர்முகத்தேர்வு, மருத்துவ பரிசோதனை ஆகியவற்றை உள்ளடக்கியதாகும்.
தேர்வு நடைபெறும் தேதி: 2015 ஆகஸ்ட்,செப்டம்பரில் தேர்வு நடைபெறும். அனைத்து தேர்வுகளிலும் தேர்ச்சி பெற்றவர்கள் அடங்கிய மெரிட் பட்டியல் தயாரிக் கப்பட்டு அதன் அடிப்படை யில் பயிற்சிக்கு செல்ல அனுமதிக்கப்படுவர்.
மொத்த பயிற்சி காலம்: 5 ஆண்டுகள். ஒரு வருடம் அடிப்படை ராணுவ பயிற்சி கயாவில் உள்ள ராணுவ அதிகாரிகள் பயிற்சி கல்லூரியில் அளிக்கப்படும். அதன்பின்னர் 4 ஆண்டுகள் பூனா, மோவ், செகந்திராபாத் ஆகிய இடங்களில் உள்ள ராணுவ பொறியியல் கல்லூரிகளில் தொழில்நுட்ப பயிற்சியளிக்கப்பட்டு பி.இ., பட்டம் வழங்கப்படும்.
உதவித்தொகை: பயிற்சியின் போது மாதம் ரூ.21,000 வழங்கப்படும். பயிற்சியை முடித்தபின் லெப்டினன்ட் அந்தஸ்தில் பணி நியமனம் வழங்கப்படும். இது நிரந்தர பணியாகும். பணிஓய்வு வயது வரை ராணுவத்தில் பணியாற்ற வேண்டும்.
5 வருட பயிற்சிக்கு ஆகும் அனைத்து செலவுகளையும் ராணுவம் ஏற்றுக் கொள்ளும்.
ஆன்லைனில் விண் ணப்பிக்க கடைசி நாள்: 10.7.2015.
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.joinindianarmy.nic.in என்ற இணைய தளத்தை பார்க்கவும்.