பிளஸ் 2வில் அதிக மார்க் அள்ள சிறப்பு புத்தகம்

அரசு பள்ளிகளில் படிக்கும், பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு, முக்கிய பாடங்களின், கேள்வி - பதில் அடங்கிய, 'பயிற்சி பெட்டகம்' என்ற, சிறப்புப் புத்தகம் வழங்கப்பட உள்ளது.இதுகுறித்து, அதிகாரிகள் கூறியதாவது:பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பில், அனைத்து பாடங்களுக்கும், தனித்தனியே பயிற்சி பெட்டகம்
தயாரிக்கப்பட்டுள்ளது. வல்லுனர் மற்றும் ஆசிரியர் குழுக்கள் இணைந்து, பல ஆண்டுகளின் கேள்வித் தாள் மற்றும் மாணவர்களின் திறனை ஆய்வு செய்து, இந்த புத்தகம் தயாரிக்கப்பட்டுள்ளது.


          முக்கியமான வினா மற்றும் விடைகள்; தேர்வுக்கு வரும் முக்கிய பாடப்பகுதி; பாடங்களுக்கு தேவையான முக்கிய அம்சங்கள்; எந்த கேள்விகளை படித்தால் அதிக மதிப்பெண் பெறலாம்; எந்தப் பகுதியைப் படித்தால், பாடங்களின் முக்கிய அம்சங்களை தெரிந்து கொள்ளலாம் போன்ற விவரங்கள் இந்த புத்தகத்தில் இருக்கும்.இந்த புத்தகங்கள், ஒவ்வொரு பள்ளி தலைமை ஆசிரியருக்கும் வழங்கப்படும். மாணவர்கள் நகல் எடுத்துக் கொள்ளலாம்; விற்பனைக்கு கிடையாது.இவ்வாறு, அதிகாரிகள் தெரிவித்தனர்.