பிளஸ் 1 மாணவர்களுக்குகிடைத்தது 'பொருளியல்''தினமலர்' செய்தி எதிரொலி

மதுரை:வழங்கப்படாமல் இருந்த பொருளியல் புத்தகங்கள் 'தினமலர்' நாளிதழ் செய்தி எதிரொலியால் நேற்று ஒரேநாளில் அனைத்து மாணவர்களுக்கும் வழங்கப்பட்டன.தி.மு.க., ஆட்சியில் தயாரிக்கப்பட்ட பிளஸ் 1, பிளஸ் 2 பாடத்திட்ட புத்தகங்களில் இடம் பெற்ற
முகவுரையில் அப்போதைய முதல்வர் கருணாநிதி, அமைச்சர் தங்கம் தென்னரசு பெயர் இடம் பெற்றதால் சர்சையானது. இதனால் மாணவர்களுக்கு இந்தாண்டு வழங்கப்பட்ட புத்தகங்கள் திரும்ப பெறப்பட்டு அப்பக்கம் நீக்கப்பட்டு மீண்டும் வழங்கப்பட்டன.

இதில் பிளஸ் 1 மாணவர்களுக்கு மட்டும் பொருளியல் புத்தகங்கள் நேற்று முன்தினம் வரை வழங்கப்படவில்லை. இந்நிலையில் ஜூலை 24ல் முதல் இடைத்தேர்வு அறிவிக்கப்பட்டதால் மாணவர்கள் அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து 'தினமலர்' நாளிதழில் நேற்று செய்தி வெளியானது.இதையடுத்து பிளஸ் 1 மாணவர்களுக்கு அந்த புத்தகங்கள் நேற்று ஒரேநாளில் வழங்கப்பட்டன. கல்வித்துறை உயர் அதிகாரிகள் உத்தரவுப்படி, வழங்கப்பட்ட புத்தகங்கள் விவரம் குறித்த அறிக்கையை மாவட்ட கல்வி அலுவலர்கள் நேற்றே உயர் அதிகாரிகளுக்கு அனுப்பி வைத்தனர்.