TNPSC குரூப்-1 மெயின் தேர்வு இன்று தொடங்குகிறது: 4,382 பேர் எழுதுகின்றனர்

 துணை ஆட்சியர், டிஎஸ்பி, வணிகவரி உதவி ஆணையர், ஊரக வளர்ச்சி உதவி இயக்குநர்ஆகிய பதவிகளில் 79 காலியிடங்களை நிரப்புவதற்கான குரூப்-1 மெயின் தேர்வு சென்னையில் இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது. 
 
       7-ந் தேதி வரை 3 நாட்கள் நடைபெறும் இத்தேர்வில் 4,382 பேர் கலந்துகொள்வதாக டிஎன்பிஎஸ்சி தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி வே.ஷோபனா தெரிவித்தார். எழும்பூர் மாநில பெண்கள் மேல்நிலைப்பள்ளி, சூளை செயின்ட் ஜோசப் பெண்கள் மேல்நிலைப்பள்ளி உள்பட 42 மையங்களில் தேர்வு நடக்கிறது.