இன்றுடன் முடிகிறது மருத்துவ படிப்பு கலந்தாய்வு

சென்னை: மருத்துவ படிப்புக்கான முதற்கட்ட கலந்தாய்வு, இன்றுடன் முடிகிறது. அரசு கல்லுாரிகளில், 84 இடங்கள் மட்டுமே காலியாக உள்ளன.

தமிழகத்தில், எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்புக்கான கலந்தாய்வு, 19ம் தேதி துவங்கி, சென்னை, ஓமந்துாரார் மருத்துவமனையில் நடந்து வருகிறது. ஆறாம் நாளாக நேற்று நடந்த கலந்தாய்வில், 962 பேர் பங்கேற்றனர்; 660 பேர் இடங்கள் பெற்றனர். எம்.பி.பி.எஸ்., படிப்புக்கு, அரசு கல்லுாரிகளில் - 84; சுய நிதி கல்லுாரிகளில் - 114, அரசு பல் மருத்துவக் கல்லுாரியில், 16 இடங்களே மீதம் உள்ளன. இன்றுடன் முதற்கட்ட கலந்தாய்வு முடிகிறது. பெரும்பாலான இடங்கள் நிரம்பி விடும் என, தெரிகிறது.