ஆய்வக உதவியாளர் நியமனம்: அரசு உயர் நீதிமன்றத்தில் விளக்கம்

பள்ளி ஆய்வக உதவியாளர் பணியிடங்கள் நியமனம்
 தகுதிகாண்மதிப்பெண்நேர்முகத் தேர்வு மதிப்பெண் 
அடிப்படையிலேயேநடைபெறும் என தமிழக அரசு 
உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
பெரிய காஞ்சிபுரத்தைச் சேர்ந்த பி.சதீஷ் என்பவர் உயர்
 நீதிமன்றத்தில்
மனு தாக்கல் செய்தார்அதில்தமிழக கல்வித் துறையில்
ஆசிரியர்கள்ஆசிரியர் அல்லாத பணியிடங்கள் பள்ளிக் 
கல்வித்துறை மூலம் நேரடியாக நிரப்பப்படுகின்றன.
இந்த நிலையில்தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில்
 காலியாகஉள்ள ஆய்வக உதவியாளர் பணியிடங்களை
நிரப்புவது தொடர்பாககடந்த ஏப்ரல் மாதம் 22-ஆம் தேதி பள்ளிக் கல்வித் துறை அறிவிப்புவெளியிட்டது.
அதில்ஆய்வக உதவியாளர் பணிக்கு குறைந்தபட்ச 
கல்வித் தகுதி 10-ஆம் வகுப்பு தேர்ச்சி எனக் 
குறிப்பிடப்பட்டிருந்தது
மேலும்அதில்ஐந்து நபருக்கு ஒருவர் என்ற
 விகிதத்தின் அடிப்படையிலும்,நேர்காணலின்போது
 பெறுகின்ற மதிப்பெண் அடிப்படையிலும்பணியிடம்
 நிரப்பப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டதுமேலும்
,எழுத்துத் தேர்வில் பெற்ற மதிப்பெண் கருத்தில் 
கொள்ளப்படாதுஎனவும் அதில் தெரிவிக்கப்பட்டது.
இந்த அறிவிப்பாணையில் குறிப்பிடப்பட்டுள்ள தேர்வு செய்யும்முறையில் கடுமையான முரண்பாடுகள் உள்ளனஇது சட்டஉரிமைகளை மீறுவதாக உள்ளதுஇந்தத் தேர்வு நடைமுறை அரசுவெளியிட்ட முந்தைய உத்தரவுகளுக்கு எதிராக உள்ளது.
இந்தப் பணிக்கான எழுத்துத் தேர்வு கடந்த மாதம் 31-ஆம் தேதிதமிழகம் முழுவதும் நடைபெற்றதுஎனவேபள்ளி ஆய்வகஉதவியாளர் பணிக்கான அனைத்து நடைமுறைகளுக்கும் தடைவிதிக்க வேண்டும்மேலும்கடந்த ஏப்ரல் 22-ஆம் தேதிபிறப்பிக்கப்பட்ட அறிவிப்பாணையை ரத்து செய்ய வேண்டும் எனமனுவில் கோரினார்கடந்த முறை இந்த வழக்கு விசாரணைக்குவந்தபோதுஎழுத்துத் தேர்வில் பெற்ற மதிப்பெண் அடிப்படையில்பணி நியமனம் நடைபெறுமாநடைபெறாதாஎன்பது குறித்து பதில்மனு தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டது.

இதையடுத்துஇந்த வழக்கு விசாரணை நீதிபதி டி.ஹரிபரந்தாமன்முன் செவ்வாய்க்கிழமை நடைபெற்றதுவிசாரணையின்போது,தமிழக பள்ளிக் கல்வித் துறை சார்பில் பதில் மனு தாக்கல்செய்யப்பட்டதுஅதில்ஆய்வக உதவியாளர் பணி நியமனம்,நேர்முகத் தேர்வில் பெறப்படும் மதிப்பெண்தகுதிகாண் மதிப்பெண்ஆகியவற்றின் அடிப்படையில் தகுந்த நபர்கள் தேர்வுசெய்யப்படுவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டதுஇந்த மனு மீதானவிசாரணையை வருகிற 18-ஆம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.