ஜூலை ஆகஸ்ட்டில் செயற்கை கோள்: இஸ்ரோ

நாகர்கோவில்: வரும் ஜூலை , ஆகஸ்ட் மாதங்களில் விண்ணில் செயற்கைகோள் ஏவ இஸ்ரோ திட்டமிட்டுள்ளதாக திருவனந்தபுரம் விக்ரம் சாராபாய் விண்வெளி ஆராய்ச்சி மையத்தை சேர்ந்த விஞ்ஞானி சிவன்
தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது: கிரயோஜெனிக் இன்ஜின் பரிசோதனை முழுமையாக முடிவடைந்துள்ளது. வரும் ஜூலை மாதம் 10-ம் தேதி பி.எஸ்.எல்.வி சி-28 ரக ராக்கெட் விண்ணில் செலுத்தப்பட உள்ளது. இது பேரிடர் மேலாண்மை குறித்த செயற்கை கோளை விண்ணில் செலுத்த பயன்படுத்தப்பட உள்ளது. மேலும் தகவல் தொடர்புக்கு பயன்படும் செயற்கை கோளை விண்ணில் செலுத்துவதற்கு ஜி.எஸ்.எல்.வி டி-6 வகை ராக்கெட் ஆகஸ்ட் மாதம் விண்ணில் செலுத்தப்பட உள்ளது என தெரிவித்தார்.