கழிப்பறைகளை பராமரிக்க துப்புரவாளர் நியமனம்

சென்னை:தமிழக சட்டசபையில், முதல்வர் ஜெயலலிதா, 110வது விதியின் கீழ் வெளியிட்ட அறிவிப்பில், 'அரசு தொடக்க, நடுநிலை நகராட்சி, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளின் கழிப்பறைகளை பராமரிக்க, உள்ளாட்சி துப்புரவு பணியாளர்கள் நியமிக்கப்படுவர். இதற்கு, 160.70 கோடி ரூபாய் ஒதுக்கப்படும்' என்று தெரிவித்திருந்தார்.
 
       இதற்கான அரசாணை அனைத்து மாவட்ட கல்வி அலுவலகங்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளது. கழிப்பறை பராமரிப்பு தொடர்பாக, உடனடியாக உள்ளாட்சி அலுவலக அதிகாரிகளை தொடர்பு கொண்டு பணிகளை துவங்க உத்தரவிடப்பட்டுள்ளது