வரும் 24ம் தேதி 'ஸ்டிரைக்' வங்கி ஊழியர்கள் முடிவு

பாரத ஸ்டேட் வங்கியுடன் அதன் துணை வங்கிகளை இணைக்க எதிர்ப்பு தெரிவித்து, வரும், 24ம் தேதி, ஒருநாள், நாடு முழுவதும், வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம் செய்கின்றனர்.          அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்க, சேலம் மாவட்ட தலைவர் சுவாமிநாதன் கூறியதாவது:பாரத ஸ்டேட் வங்கியின் துணை வங்கிகள், 3,000க்கும் மேற்பட்டவை உள்ளன. இவை, 'சமஸ்தானம்' காலத்தில், அந்தந்த எல்லைக்கு உட்பட்ட மக்களின் தேவையை நிறைவேற்றவும், சேவையாற்றவும் உருவாக்கப்பட்டன; பின், அரசுடைமை ஆக்கப்பட்டன.

மக்களின் தேவையறிந்து உருவாக்கப்பட்ட, ஸ்டேட் பாங்க் ஆப் மைசூர், ஸ்டேட் பாங்க் ஆப் திருவாங்கூர், ஸ்டேட் பாங்க் ஆப் டிகானிர் ஜெய்ப்பூர் உள்ளிட்ட, பல துணை வங்கிகளை, பாரத ஸ்டேட் வங்கியுடன் இணைக்க முயற்சி நடக்கிறது; அதை செய்யக் கூடாது.அப்படி செய்வதால், வங்கியின் முக்கியத்துவமும், வங்கி துவங்கப்பட்ட நோக்கமும் இல்லாமல் போய்விடும். வாடிக்கையாளர் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று, நல்ல நிலையில் லாபத்தில் இயங்கும் துணை வங்கிகளை இணைக்க வேண்டிய அவசியமோ, கட்டாயமோ கிடையாது.

துணை வங்கிகளை இணைக்கும் மத்திய அரசின் முடிவை எதிர்த்து, வரும், 24ம் தேதி ஒருநாள், தேசிய அளவில், வேலைநிறுத்த போராட்டம் நடத்தப்படும்.இவ்வாறு, அவர் தெரிவித்தார்.