21ம் தேதி சர்வதேச யோகா தினம்

வரும் 21ம் தேதி சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட உள்ளது.இந்த தகவலைமக்களிடம் கொண்டு செல்ல பல உத்திகளை மத்திய அரசு கையாண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக நாடு முழுவதிலும் உள்ள
கோடிக்கணக்கான அலைபேசி உபயோகிப்பாளர்களுக்கு யோகா தினத்தைக் கொண்டாட நேற்று முதல் எஸ்.எம்.எஸ்., மூலம் வேண்டுகோள் விடுக்கப்பட்டு வருகிறது.அதில் 'யோகா செய்யுங்கள். அது, உடல், மனம், உணர்ச்சி மற்றும் ஆற்றலை மேம்படுத்தும்; வாழ்க்கையை, அதன் முழுத் திறனுக்கேற்ப, யோகாவை பயன்படுத்தி, வாழுங்கள் - ஆயுஷ் அமைச்சகம், மத்திய அரசு' என குறிப்பிடப்பட்டுள்ளது.-