மதுரை காமராஜர் பல்கலைகழகம் - 2015 - 2017 ஆம் ஆண்டிற்கான தொலைதூரக்கல்வி B.ED விண்ணப்பம்

      மதுரை காமராஜ் பல்கலை தொலைநிலைக் கல்வி இயக்ககம் சார்பில் நடப்பு ஆண்டிற்கான (2015-16) பி.எட்., (இளங்கலை கல்வியியல்) படிப்பிற்கான விண்ணப்பங்கள் ஜூன் 29 முதல் வினியோகிக்கப்படுகின்றன.
 
        இரண்டாண்டு படிப்பான இதற்கு தொடக்கக் கல்வியில் நேரடி பயிற்சிபெற்று அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனங்களில் இரண்டு ஆண்டுகள் கற்பித்தல் பணி அனுபவத்துடன் உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் கற்பிக்கப்படும் பாடங்களில் ஏதேனும் ஒன்றில் அங்கீகரிக்கப்பட்ட பல்கலையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். 

அரசு இடஒதுக்கீடு அடிப்படையில் சேர்க்கை நடக்கும். இதற்கான விண்ணப்பங்கள் பல்கலை மாணவர் சேர்க்கை மையம், மதுரை அழகர்கோவில் ரோடு பல்கலை வளாக மாணவர் சேர்க்கை மையம் ஆகிய இடங்களில் வழங்கப்படும். மேலும் www.mkudde.org என்ற இணையதளத்திலும் பதிவிறக்கம் செய்து உரிய கட்டணத்துடன் அனுப்பி வைக்கவேண்டும். மேலும் விவரங்கள் 0452- 253 5973 என்ற தொலைபேசி எண்ணில் கேட்டுக்கொள்ளலாம் என தொலை நிலைக் கல்வி இயக்ககம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.