பிளஸ் 1 வகுப்புகள் இன்று துவக்கம்

கோடை விடுமுறை மற்றும் 10 வகுப்பு தேர்ச்சி முடிவுகளுக்குப் பின், அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில், பிளஸ் 1 வகுப்பு இன்று துவங்குகிறது.தமிழகத்தில், கடந்த கல்வியாண்டில், 10ம் வகுப்பு பொதுத் தேர்வு, ஏப்., 10ம் தேதி முடிந்தது; இதன் முடிவுகள், மே 21ம் தேதி வெளியாகின. 
 
 
இம்முறை, அறிவியல், கணிதம் மற்றும் சமூக அறிவியலில், 'சென்டம்' எடுத்த மாணவர்களின் எண்ணிக்கை கடுமையாக அதிகரித்தது; அதேபோல், மாநிலத்தில் முதல் மூன்று, 'ரேங்க்' பட்டியலில், 773 பேர் இடம் பெற்றனர்.'காமர்ஸ்' பிரிவு இதையடுத்து, ஜூன் 1 முதல், பிளஸ் 1 வகுப்புக்கான மாணவர் சேர்க்கை துவங்கியது. இந்த ஆண்டு, பிளஸ் 2 தேர்வில் மாநில, 'ரேங்க்' பட்டியலில், 'காமர்ஸ்' மாணவர்கள் முக்கிய இடம் பிடித்ததால், பிளஸ் 1 புதிய மாணவர் சேர்க்கையில், 'காமர்ஸ்' பிரிவுக்கு அதிக போட்டி ஏற்பட்டது. 
தற்போது, மாணவர் சேர்க்கை முடிந்துள்ள நிலையில், அனைத்து பள்ளி களிலும், மாணவர்களுக்கு, இன்று பிளஸ் 1 வகுப்புகள் துவங்குகின்றன. அதிக தேர்ச்சிஇந்த ஆண்டு அரசு பள்ளிகளில், பிளஸ் 1 வகுப்புகளில், பிளஸ் 2 போல் முக்கியத்துவம் கொடுத்து, பாடம் நடத்த வேண்டும் என்றும், பிளஸ் 2 வகுப்பில் அதிக தேர்ச்சிக்கு, பிளஸ் 1 வகுப்பிலேயே அடித்தளமிட வேண்டும் என்றும், பள்ளிக்கல்வி இயக்குனர் 
கண்ணப்பன், ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தி உள்ளார்.