பொறியியல் படிப்புக்கான தரவரிசைப் பட்டியல் அண்ணா பல்கலைக்கழகத்தில் நாளை (19.06.15) வெளியிடப்படுகிறது.

பொறியியல் படிப்புக்கான தரவரிசைப் பட்டியல் அண்ணா பல்கலைக்கழகத்தில் நாளை வெளியிடப்படுகிறது. இந்த ஆண்டு பொறியியல் படிப்பில் சேருவதற்கு 1 லட்சத்து 54 ஆயிரத்து 238 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். இவர்களுக்கான ரேண்டாம் எண் கடந்த 15-ம் தேதி 
அன்லை னில் ஒதுக்கப்பட்டது. இந்நிலையில் மாணவர்களின் தரவரிசைப் பட்டியல் நாளை (வெள்ளிக் கிழமை) அண்ணா பல்கலைக் கழகத்தில் வெளியிடப்படுகிறது. அன்றைய தினமே கலந்தாய்வுக் கான அழைப்புக் கடிதம் மாணவர் களுக்கு தபால் மூலம் அனுப்பி வைக்கப்படும். இந்த அழைப்பு கடிதத்தை பயன்படுத்தி மாண வரும், துணைக்கு வரும் ஒருவரும் அரசு பேருந்துகளில் 50 சதவீத கட்டண சலுகையை பெறலாம். பொது கலந்தாய்வு ஜூலை 1-ம் தேதி தொடங்குகிறது. தினமும் 6 ஆயிரம் பேர் வீதம் கலந்தாய் வில் கலந்து கொள்வார்கள். விண்ணப்பத்தில் உரிய சாதி சான்றிதழ் நகலை சமர்ப்பிக்கா தவர்கள், கலந்தாய்வின்போது சமர்ப்பித்தால் அவர்களுக்கான இடஒதுகீடு சலுகை வழங்கப்படும். கலந்தாய்வு நாட்களில் கல்லூரிகளில் காலி இடங்கள் குறித்த விவரம் தினமும் 8 முறை ஆன்லைனில் பதிவு செய்யப்படும். இதன் மூலம் கல்லூரிகளின் காலியிடங்களை மாணவர்கள் தெரிந்துகொள்ளலாம். கலந்தாய்வு முழுவதும் 6 கேமராக்கள் மூலம் பதிவு செய்து கண்காணிக்கப்படும். குறிப்பிட்ட கல்லூரியில் சேர்க்க சொல்லி வெளிநபர்கள் யாரும் அண்ணா பல்கலைக்கழகத்தின் வெளியே துண்டு அறிக்கையை விநியோகிக்கக்கூடாது. அவ்வாறு ஈடுபட்டால், அவர்களை காவல்துறையிடம் ஒப்படைக்க வேண்டும் என்று தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கை செயலாளர் வி.ரைமன் உத்தரியராஜ் தெரிவித்தார்.