ஜூன் 13-இல் பிளஸ் 2 மாணவர்களுக்கான இலவசக் கல்வி ஆலோசனை முகாம்

பிளஸ் 2 தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கான இலவசக் கல்வி ஆலோசனை முகாம் சென்னையில் சனிக்கிழமை (ஜூன் 13) நடைபெறவுள்ளது.  இது குறித்து சங்கர நேத்ராலயா
அகாதெமி வெளியிட்டுள்ள செய்தி:
பிளஸ் 2 வகுப்பில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கான இலவச கல்வி ஆலோசனை முகாம் அம்பத்தூர் மௌனசாமி மடம் தெருவில் உள்ள அபிராமி சிற்றரங்கில் சனிக்கிழமை (ஜூன் 13) காலை 9.30 மணி முதல் பகல் 12.30 மணி வரை நடைபெறவுள்ளது.
 இந்த முகாமில் சுகாதாரம் சார்ந்த அறிவியல் பிரிவுகளில் அதிக வேலைவாய்ப்புகளை அளிக்கும் பட்டப்படிப்புகள், டிப்ளமோ படிப்புகள் குறித்து அனுபவம் வாய்ந்த கல்வி ஆலோசகர்கள் விளக்கமளிக்கவுள்ளனர். இதில் கலந்துகொள்ள விரும்புவோர் 94440 33082 என்ற செல்லிடப்பேசி எண்ணில் தொடர்பு கொண்டு முன்பதிவு செய்து கொள்ளலாம்.