Chartered Accountant (CA Course) படிப்பது எப்படி?

CA படிப்புக்கென தனிப்பட்ட முறையில்
எந்த ஒரு கல்லூரி மற்றும் கல்வி
நிறுவனங்களும் கிடையாது.
எனவே இதை எப்படி படிப்பது?


இதற்கென பாராளுமன்றத்தால் சட்டம்
இயற்றப்பட்டு The Institute of Chartered
Accountants of India Act,1949 என்ற
சட்டத்தின்படி The Institute of Chartered
Accountants of India (ICAI) என்ற அமைப்பின்கீழ்
செயல்படும் சட்டபூர்வ அமைப்பாகும்.
அதன் தலைமை இடம் புது
டெல்லியிலும், அதன் கிளைகள் 144
இடங்களிலும் செயல்பட்டு வருகிறது.
CA - படிக்க விரும்பும் மாணவர்கள் ICAI
கிளைகள் மூலமாக அல்லது www.ICAI.org
என்ற இணையதளம் மூலமாக பதிவு
செய்து தொலைதூர கல்வியாகத்
(Correspondence Course) தான் படிக்க
முடியும்.
மேலும் CA முடித்து பட்டயம் பெற்ற
Chartered Accountant இடம் 3 ஆண்டு கட்டாய
பயிற்சி பெற வேண்டும்.
CA படிப்புக்காக தனி அந்தஸ்து மற்றும்
தேவைகள் உலக அரங்கில் மிக அதிகமாக
உள்ளதை சில தனியார் அமைப்புகள்
தங்களின் சுயநலம் மற்றும் வியாபார
நோக்கத்திற்காக மாணவர்களையும்
பெற்றோர்களையும் குழப்பமடையச்
செய்து பணத்தையும் மாணவர்களின்
பொன்னான நேரத்தையும்
வீணடிக்கிறார்கள்.
எனவே பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள்
CA படிப்புகுறித்து தெரிந்துகொள்ள
CA முடித்த பட்டயம் பெற்ற பட்டய
கணக்காளரிடம் (Chartered Accountant)
அல்லது ICAI கிளைகளை அணுகி
மாணவர்களின் CA கனவை
நனவாக்கிக்கொள்ளவும்.
ICAI கிளைகளின் தொடர்பு எண்கள்
திருப்பூர் கிளை 0421 2202732 / 9843371234
திருப்பூர் கிளை தலைவர் 9894082482
ஈரோடு கிளை 0424-2430776 / 9842930776
கோவை கிளை 0422-4270056, 4270058
சேலம் கிளை 0427-2318813, 2326638
சென்னை மண்டல அலுவலகம் 044-30210310,
30210311, 30210312
இணையதளம் www.icai.org
www.sircoficai.org