பெண்களுக்கு மகப்பேறு விடுப்பு: விதிமுறைகள் அறிவிப்பு

சென்னை: அரசு அலுவலகங்களில் பணிபுரியும் பெண்களுக்கு, மகப்பேறு விடுப்பு அளிக்கும்போது, சில விதிமுறைகளை பின்பற்றும்படி, அரசு அறிவுறுத்தி உள்ளது.

அரசு அலுவலகங்களில் பணியாற்றும் பெண் ஊழியர்களுக்கு, மகப்பேறு விடுப்பு அளிப்பதில், பல சந்தேகங்கள் இருப்பதாக, அரசுக்கு புகார் வந்தது. அதை சீர்படுத்த, துறை செயலர்கள் மற்றும் நீதிமன்றங்களுக்கு, பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்த துறை (பயிற்சி), முதன்மை செயலர் அனிதா பிரவீன், சுற்றறிக்கை அனுப்பி உள்ளார்.

அந்த, சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:



* அரசு பெண் ஊழியர்களுக்கு, ஆறு மாத காலம், பேறுகால விடுப்பு அளிக்கப்படுகிறது.

* இரண்டு குழந்தைகளுக்கு குறைவாக இருந்தால், இந்த விடுப்பை பெறலாம்.

* தற்காலிக பணியாளருக்கு, நிபந்தனைகளின்படி விடுப்பு தரப்படும்.

* கரு முன்னதாக கலைந்து விட்டால், அவர்களுக்கு, சராசரி ஊதியத்துடன், ஆறு வாரங்களுக்கு விடுப்பு தரப்படும்.

* பேறுகால விடுப்பு, 12 வாரம் முதல், 20 வாரங்கள் வரை இருக்க வேண்டும்.

* பிறக்கும்போது, குழந்தை இறந்தால், அவர்களுக்கு, 90 நாட்கள் வரை விடுப்பு தரலாம். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.