பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள்: முதலிடம் பெற்றவர்களின் பெயர்கள்

சென்னை, பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று  காலை 10 மணிக்கு வெளியிடப்பட்டது.
பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி உட்பட 11,827 பள்ளிகளை சேர்ந்த 3 ஆயிரத்து 298 தேர்வு மையங்களில் 10 லட்சத்து 72 ஆயிரத்து 691 மாணவர்கள் எழுதினர்.

இவர்களில் 5 லட்சத்து 40 ஆயிரத்து 505 மாணவர்கள். 5 லட்சத்து 32 ஆயிரத்து 186 பேர் மாணவிகள். தனித்தேர்வர்களாக 50 ஆயிரத்து 429 பேரும் தேர்வு எழுதினர்.
சென்னை மாவட்டத்தில் உள்ள 578 பள்ளிகளில் இருந்து 28 ஆயிரத்து 124 மாணவர்களும், 29 ஆயிரத்து 230 மாணவிகளும் 209  தேர்வு மையங்களிலும், புதுச்சேரி மாநிலத்தில் இருந்து 291  பள்ளிகளில் இருந்து 9 ஆயிரத்து 703  மாணவர்களும், 9 ஆயிரத்து 856 மாணவிகளும் 48 மையங்களில் தேர்வு எழுதினர்.
அவர்களின் விடைத்தாள் திருத்தும் பணி முடிக்கப்பட்டு, மதிப்பெண் பதிவேற்றம் செய்யும் பணிகள் நடைபெற்று முடிந்துள்ளன. அதனை தொடர்ந்து அவர்களின்  தேர்வு முடிவுகள் இன்று காலை 10 மணிக்கு வெளியிடப்பட்டது.
அரசு தேர்வுகள் இயக்குநர் தேவராஜன் தேர்வு முடிவுகளை இன்று வெளியிட்டார்.
இதில் தமிழை முதல் பாடமாக எடுத்து படித்த சென்னை சேலையூர் சியோன் பள்லி ஜேஸ்லின் ஜெலிசா 499 மதிப்பெண்கள் பெற்று மாநிலத்தில் முதலிடம் பெற்றுள்ளார்.
மேலும் 499 மதிப்பெண்கள் பெற்று 41 மாணவர்கள் முதலிடம் பிடித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. 498 மதிப்பெண்கள் பெற்று 192 இரண்டாம் இடம் பெற்றுள்ளனர். 540 பேர் 497 மதிப்பெண்கள் பெற்று மூன்றாம் இடம் பிடித்துள்ளனர்.
பத்தாம் வகுப்பு பொதுத் தேர்தவில் 41 பேர் 499 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் முதலிடம் பெற்றவர்களின் விபரங்கள்:
ஜனனி (எஸ்.ஆர்.எம்., மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, ஈரோடு)
தீப்தி (ஸ்ரீ வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, ஈரோடு)
கோகுல கிருஷ்ணன் (ஜான் பிரிட்டோ மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, சேலம்)
ஜெயநந்தினி(அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி, வாழப்பாடி, சேலம்)
மாலினி(பாரதி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, சேலம்)
பூஜம்(செண்ட் ஜோசப் மெட்ரிக் பள்ளி, சேலம்)
ஷாக்ஷினி (க்ரீன் பார்க் பெண்கள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, நாமக்கல்)
சிநேகா (எஸ்.கே.வி.,மெட்ரிக் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, நாமக்கல்)
தனப்பிரியா(ஆறுமுகம் அகாடமி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி,கரூர்)
தேவதா நிலானி(பரணி பார்க் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, கரூர்)
முத்துவேணி (செண்ட் ஜோசப் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, நெல்லை),
ஆர்த்தி (ரோஸ்மேரி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, பாளையங்கோட்டை, நெல்லை),
கார்த்திக் அருண்( ஸ்பிக் நகர் மேல்நிலைப்பள்ளி, தூத்துக்குடி),
நித்யஸ்ரீ (விவேகானந்தா வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி,ராமநாதபுரம்),
சசிகலா (அருள்மிகு வெங்கடேஸ்வரா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, டி.கல்லுப்பட்டி, மதுரை),
தேவதர்ஷினி (சுவாமி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, பழனி)
அர்ச்சனா ( இன்பன்ட் ஜீசஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, குமரன் நகர்,திருப்பூர்)
செல்வநாயகி( பொண்ணு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, தாராபுரம், திருப்பூர்)
ஷர்மிளா(விவேகானந்தா வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, முத்தூர், திருப்பூர்)
கிருத்திகாயினி(சிவாலிக் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, சங்கம்பாளையம்)
கரோலினா (விவேக் வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, கிணத்துக்கடவு, கோவை)
ஹர்ஷினி(சி.எம்.எஸ்., மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, கணபதி, கோவை)
கிருத்திகா (வித்ய விகாஷ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, சிக்கந்தர்பாளையம், கோவை)
கார்த்திகா(பிஷப் பிரான்சிஸ் மெட்ரிக் பள்ளி, கோவை)
பாரதிராஜா (அரசுப்பள்ளி, பரனம்)
ஜெயஸ்ரீ(பாத்திமா மெட்ரிக் பள்ளி, ஜெயங்கொண்டம்)
ரவீணா(தந்தை ரோவர் மெட்ரிக் பள்ளி, பெரம்பலூர்)
ஜோஸ்வின்(செண்ட் ஜோசப் மெட்ரிக் பள்ளி, திருவாரூர்)
வைஷ்ணவி (அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி, பட்டுக்கோட்டை, திருவாரூர்)
ருக்ஷிதா(பிருந்தாவன் அரசு மேல்நிலைப் பள்ளி, திருவாரூர்)
அட்சயம்(பெஸ்ட் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, தஞ்சாவூர்)
திவ்யலட்சுமி(மேக்ஸ்வெல் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, தஞ்சாவூர்)
முத்தலு (அமலுர்பவம் மேல்நிலைப் பள்ளி, புதுச்சேரி)
கல்பனா(ஸ்ரீநவதுர்க்கா மேல்நிலைப்பள்ளி, புதுச்சேரி)
ஜஸ்லின் ஜெனிசா(ஜியான் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, காஞ்சிபுரம்)
அபிஷ்மா(எல்.இ.எப்.ஈடன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, திருவள்ளூர்)
ஆர்த்தி(சேது பாஸ்கர மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, சென்னை)
நந்தினி(செண்ட் மேரிஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, கும்மிடிப்பூண்டி)
அனுகீர்த்தனா(வேலம்மாள் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, சென்னை)
ஷிவானி(வேலம்மாள் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, சென்னை)
அனகீர்த்தனா(வேலம்மாள் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, சைதாப்பேட்டை, சென்னை)