புதிய தேர்தல் ஆணையர் பொறுப்பேற்பு

புதுடில்லி: குஜராத் மாநில முன்னாள் தலைமைச் செயலர் அச்சல் குமார் ஜோதி, புதிய தேர்தல் ஆணையராக நேற்று பொறுப்பேற்றார். தலைமை தேர்தல் ஆணையராக இருந்த பிரம்மா ஓய்வுபெற்ற பின், நசீம் சையதி, தலைமை தேர்தல் ஆணையராக, கடந்த ஏப்ரலில் பதவி உயர்வு பெற்றார். இதையடுத்து, மூன்று பேர் அடங்கிய தேர்தல் தலைமை ஆணையத்தில்,
இரண்டு ஆணையர் பணியிடங்கள் காலியாக இருந்தன. இந்நிலையில், குஜராத்தில், நரேந்திர மோடி முதல்வராக இருந்தபோது, அம்மாநில தலைமைச் செயலராக பணியாற்றிய, அச்சல் குமார் ஜோதி, புதிய தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். டில்லியில் உள்ள தலைமை தேர்தல் ஆணையத்தில், இவர், நேற்று பொறுப்பை ஏற்றுக்கொண்டார். இந்நிலையில், தலைமை தேர்தல் ஆணையத்தில், காலியாக உள்ள மேலும் ஒரு ஆணையருக்கான பணியிடம் விரைவில் நிரப்பப்படும் என, தகவல் வெளியாகியுள்ளது.