பெட்ரோல் லிட்டருக்கு ரூ.3.13, டீசல் ரூ.2.71 விலை உயர்வு.. இன்று நள்ளிரவு முதல்!

டெல்லி: பெட்ரோல் விலை லிட்டருக்கு 3.13 ரூபாயும், டீசல் 2.71 ரூபாயும் அதிகரித்துள்ளது. இந்த விலை உயர்வு இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வரும் என்று எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. பெட்ரோல், டீசல் விலையை நிர்ணயிக்கும் அதிகாரம், பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களுக்கு அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை நிலவரம், அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் 15 நாட்களுக்கு ஒருமுறை, பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் மாற்றி அமைத்து வருகின்றன. Petrol price hiked by Rs 3.13 a litre, diesel by Rs 2.71 per litre கடந்த ஆகஸ்டு மாதத்தில் இருந்து பிப்ரவரி 1ஆம் தேதிவரை, பெட்ரோல் விலை 10 முறையும், அக்டோபர் மாதத்தில் இருந்து பிப்ரவரி 1ஆம் தேதிவரை, டீசல் விலை 6 முறையும் குறைக்கப்பட்டு வந்தது. இதன்மூலம், பெட்ரோல் விலை லிட்டருக்கு மொத்தம் 17ரூபாய்.11பைசாவும் டீசல் விலை மொத்தம் 12ரூபாய் 96 பைசாவும் குறைந்தது. விலை உயர்வு பிப்ரவரி 16ஆம் தேதியும், மார்ச் 1ஆம்தேதியும் பெட்ரோல், டீசல் விலை திடீரென உயர்த்தப்பட்டது. பிறகு, ஏப்ரல் 2 மற்றும் 16ஆம்தேதிகளில் பெட்ரோல், டீசல் விலை மீண்டும் குறைக்கப்பட்டது. ஆனால், ஏப்ரல் 30 ஆம் தேதி பெட்ரோல் விலை லிட்டருக்கு 3 ரூபாய்96பைசா (உள்ளூர் வரிகளை சேர்க்காமல்) உயர்த்தப்பட்டது. டீசல் விலை லிட்டருக்கு 2 ரூபாய் 37 பைசா அதிகரிக்கப்பட்டது. மீண்டும் உயர்வு இந்த நிலையில் 15 நாட்களுக்குப் பின்னர் பெட்ரோல் விலை லிட்டருக்கு 3 ரூபாய் 13 பைசாவும் டீசல் விலை லிட்டருக்கு 2ரூபாய்71 பைசவும் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வு இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது. கண்டனம் டீசல் விலை அதிரடியாக உயர்த்தப்பட்டுள்ளதற்கு தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் கண்டனம் தெரிவித்துள்ளது. விலை உயர்வு திரும்ப பெறவேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது.