இன்ஜி., படிப்புக்கு விண்ணப்பிக்க இன்னும் 2 நாள்:இன்றுடன் வினியோகம் முடிகிறது

அண்ணா பல்கலைக்குட்பட்ட இன்ஜி., கல்லுாரிகளில், மாணவர் சேர்க்கை விண்ணப்பங்களை தாக்கல் செய்ய, இன்னும் இரு நாட்களே உள்ளன. இதுவரை, 80 ஆயிரம் பேர் விண்ணப்பித்து உள்ளனர்.அண்ணா பல்கலை இணைப்பில், 580 இன்ஜி., கல்லுாரிகள் உள்ளன. இவற்றில், பி.இ., - பி.டெக்., படிப்பில் சேர, அண்ணா பல்கலையில், ஒற்றைச் சாளர முறையில் கவுன்சிலிங்
நடத்தப்படுகிறது.இதற்கான விண்ணப்பம், மே 6ம் தேதி முதல் வழங்கப்படுகிறது. மாநிலம் முழுவதும், 59 மையங்களிலும், சென்னையில் கூடுதலாக அண்ணா பல்கலையிலும்,
விண்ணப்பம் வழங்கப்படுகிறது.

இந்த ஆண்டு, 2.40 லட்சம் விண்ணப்பங்கள் அச்சடிக்கப்பட்டு உள்ளன. நேற்று மாலை வரை, 1.88 லட்சம் விண்ணப்பம் வினியோகம் செய்யப்பட்டு உள்ளன. பூர்த்தி செய்யப்பட்ட, 80 ஆயிரம் விண்ணப்பங்கள், அண்ணா பல்
கலைக்கு வந்துள்ளன. விண்ணப்ப வினியோகம், தமிழகம் முழுவதும் இன்று நிறைவடைகிறது. சென்னை அண்ணா பல்கலை வளாகத்தில் மட்டும், வரும் 29ம் தேதி வரை, விண்ணப்பம் வழங்கப்படும்.பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை, 29ம் தேதி மாலை, 5:00 மணிக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என, அண்ணா பல்கலை அறிவித்துள்ளது.
கவுன்சிலிங் விபரம்:
* ஜூன் 15 - ரேண்டம் எண்.
* ஜூன் 19 - 'கட் - ஆப்' மதிப்பெண் தரவரிசைப் பட்டியல்.
* ஜூன் 28 - விளையாட்டுப் பிரிவு மாணவர் கவுன்சிலிங்.
* ஜூன் 29 - மாற்றுத்திறனாளிகள் கவுன்சிலிங்.
*ஜூலை 1 - பொது கவுன்சிலிங் துவக்கம்.
* ஜூலை 31ம் தேதிக்குள், கவுன்சிலிங் முடித்து, ஆகஸ்ட் முதல் வாரம் வகுப்புகள் துவங்கும்.