சி.பி.எஸ்.இ., பிளஸ் 2 'ரிசல்ட்' இன்று வெளியீடு

சி.பி.எஸ்.இ., பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று பகல் 12:00 மணிக்கு வெளியாகும் என, அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில், மாநிலப் பாடத்திட்டத்துக்கான தேர்வு முடிவுகள் வெளியாகி, 10ம் வகுப்பு
முடித்தோருக்கு, பிளஸ் 1 சேர்க்கையும், பிளஸ் 2 முடித்தோருக்கு,
மருத்துவம், இன்ஜினியரிங், கலை மற்றும் அறிவியல் படிப்புகளுக்கான சேர்க்கை
நடவடிக்கைகளும் துவங்கியுள்ளன.மருத்துவம் மற்றும் இன்ஜி., படிப்புகளில் சேர, இன்னும் நான்கு நாட்களுக்குள் விண்ணப்பிக்க வேண்டும். ஆனால், சி.பி.எஸ்.இ., மாணவர்களுக்கு தேர்வு முடிவுகள் வராததால், அந்த மாணவர்கள் உயர்கல்வியில் சேர முடியுமா என, குழப்பத்தில் உள்ளனர்.இதனால், சி.பி.எஸ்.இ., மாணவர்களுக்கு, அண்ணா பல்கலையும், மருத்துவ கல்வி இயக்ககமும், 'தேர்வு முடிவுக்கு காத்திருக்காமல், முதலில் மதிப்பெண் இல்லாமல், குறிப்பிட்ட தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். தேர்வு முடிவு வந்ததும், மதிப்பெண் பட்டியலை இணைத்து அனுப்பலாம்' என, சலுகை வழங்கிஉள்ளன.இந்நிலையில், சி.பி.எஸ்.இ., பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று வெளியாகும் என, அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, மத்திய இடைநிலைக் கல்வி வாரியமான- சி.பி.எஸ்.இ., செயலர் ஜோசப் இமானு வேல் கூறியதாவது:சி.பி.எஸ்.இ., பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று பகல் 12:00 மணிக்கு வெளியிடப்படுகிறது. தேர்வு முடிவுகளை cbseresults.nic.in என்ற அதிகாரபூர்வ இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் இம்மாதம் 27ல் வெளியாக வாய்ப்பு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.-